Home> World
Advertisement

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் பலி!

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணிக்கு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 6 பேர் பலியாயினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணிக்கு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 6 பேர் பலியாயினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவின் புறநகர்ப்பகுதியில் சரப்ஜியா சாலையில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

காவல் துறையினருக்கு குறிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் " 6 பேர் பலியாகியுள்ளனர் எனவும், இருபத்தி இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்," எனவும் மாகாண உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புங்குடி, நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக காவல்துறைஅதிகாரி அப்துல் ரசாக் ஷீமாவால் கூறுகையில்; ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பலூசிஸ்தான், எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கொண்டுள்ளது. இந்த எரிவாயு வளம்.

அங்குள்ள சிறுபான்மை ஷியைட் சமூகத்தினரும், பாதுகாப்புப் படையினரும் இடையே அடிக்கடி மாகாணத்தில் போராளிகளால் தாக்கப்படுவது போன்றவை இது போன்ற தாக்குதலுக்கு காரணமாக அமைகின்றது என தெரிவித்தார்.

Read More