Home> Technology
Advertisement

CCTV: உங்களின் பழைய போனை வீட்டின் சிசிடிவியாக மாற்றுங்கள்; ஒரு ரூபாய் செலவில்லாமல்

உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோன் சிசிடிவியாக மாறும், நீங்கள் எந்த செலவும் இல்லாமல் முழு வீட்டையும் கண்காணிக்க முடியும்  

CCTV: உங்களின் பழைய போனை வீட்டின் சிசிடிவியாக மாற்றுங்கள்; ஒரு ரூபாய் செலவில்லாமல்

பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். உண்மையில், வீட்டில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், திருடர்கள் அதை குறிவைத்து, நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டை அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதைத் தவிர்க்க, பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி பொருத்துகிறார்கள். ஆனால், அனைவருக்கும் சிசிடிவி நிறுவுவதற்கான பட்ஜெட் இல்லை. 

சிசிடிவியை நிறுவுவதற்கான செலவு 5000 முதல் 20,000 ரூபாய் வரை இருக்கும். நீங்களும் இந்த சூழ்நிலையில் இருந்தால், இன்று நாங்கள் உங்களுக்கு ஒரு வழியைச் சொல்கிறோம். பணம் செலவழிக்காமல் பட்ஜெட் இல்லா சிசிடிவி மூலம் வீட்டைக் கண்காணிக்கலாம். இதற்கு, உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும். 

ஸ்மார்ட்போன் சிசிடிவி

உங்கள் வீட்டிலும் கேமராவை நிறுவ நினைத்தால், உங்கள் பழைய ஸ்மார்ட்போனில் Alfred Camera செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் புதிய ஸ்மார்ட்போனிலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போனை சிசிடிவி கேமராவாக மாற்ற இந்தப் பயன்பாடு பயன்படுகிறது. இந்த செயலியை உங்கள் புதிய மற்றும் பழைய ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்த பிறகு, இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றை கேமராவாகவும், மற்ற ஸ்மார்ட்போனை மானிட்டராகவும் உருவாக்கலாம்.

பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் தற்போது அந்த செயலியை பதிவிறக்கம் செய்திருக்கிறீர்கள் என்றால், அதன் பிறகு எந்த ஸ்மார்ட்போன் என்ன பாத்திரத்தை வகிக்கப் போகிறது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அதாவது மானிட்டர் போன் எது? சிசிடிவி போன் எது? என்பதை தீர்மானியுங்கள். பின்னர் உங்கள் வீட்டை எளிதாக கண்காணிக்கக்கூடிய இடத்தில் கேமராவுடன் இருக்கும் பழைய ஸ்மார்ட்போனை பொருத்த வேண்டும். இந்த செயல்முறையைச் செய்த பிறகு, ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜிங் ஆப்சனையும் அருகிலேயே வைப்பது நல்லது. ஒருவேளை சார்ஜ் இல்லையென்றால் வீட்டை கண்காணிக்க முடியாது.

இதற்குப் பிறகு, நீங்கள் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அதிவேக இணையத்துடன் இணைக்க வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் கேமராவை வைக்க வேண்டிய இடத்தை தூசி, வெயில், மழை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | iPhone 13-ல் ரூ. 34,000 தள்ளுபடி: பிளிப்கார்ட் சேலில் அதிரடி சலுகை, முந்துங்கள்!!

மேலும் படிக்க | கடன் செயலிகளின் ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கூகுள் ப்ளே ஸ்டோர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More