Home> Technology
Advertisement

Jio அசத்தல் திட்டம்; தினமும் 2.5 ஜிபி, 20% Cashback

Reliance Jio ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 

Jio அசத்தல் திட்டம்; தினமும் 2.5 ஜிபி, 20% Cashback

புதுடெல்லி: Reliance Jio ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை வழங்கும் ஒரே ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தின் விலை ரூ 2999 மற்றும் இது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றுடன் மொத்தம் 912.5 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இதுமட்டுமின்றி, இந்த திட்டத்தில் நிறுவனம் 20% கேஷ்பேக் வழங்கும். இந்தத் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

இந்த திட்டத்தில் 20% கேஷ்பேக்
Reliance Jio இன் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் “20% JioMart Maha Cashback” சலுகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது பயனர்கள் தங்கள் JioMart வாலட்டில் 20% கேஷ்பேக்கைப் பெறுவதற்கும் தகுதியுடையவர்கள் என்பது தான் அற்தம், இதை அவர்கள் எதிர்கால ரீசார்ஜ்களுக்கும் JioMart அல்லது ரிலையன்ஸ் ஸ்டோர்களில் இருந்து வாங்குவதற்கும் பயன்படுத்தலாம். இதனுடன், பயனர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட நான்கு ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச சந்தாவைப் பெறுகிறார்கள்.

ALSO READ | Vi அதிரடி ரீசார்ஜ் திட்டம்; மிரண்டுபோன Airtel மற்றும் Jio

ஜியோவின் ரூ.3119 திட்டம்
மறுபுறம் ஜியோவின் ரூ.3119 திட்டதை (Recharge Plan) பற்றி பேசுகையில், இது ரூ.2999 திட்டத்தின் அதே வேலிடிட்டியை ஒரு பெரிய ஓவர்-தி-டாப் (OTT) நன்மையுடன் வழங்குகிறது, இது மிகவும் குறைவான டேட்டாவை வழங்குகிறது. அதன்படி ரூ.3119 திட்டத்தில் பயனர்கள் 740ஜிபி டேட்டாவையும், ரூ.2999 திட்டத்தில் பயனர்கள் 912.5ஜிபி டேட்டாவையும் பெறுவார்கள். 

இந்த திட்டங்களுடன் 20% கேஷ்பேக் கிடைக்கும்
Reliance Jio நிறுவனம் பயனர்களுக்கு 20% கேஷ்பேக் வழங்கும் மேலும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் ரூ.299, ரூ.666 மற்றும் ரூ.719 ஆகும். ரூ.666 மற்றும் ரூ.719 ஆகிய இரண்டும் டெல்கோ வழங்கும் மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களாகும். ஜியோவின் ரூ.2999 திட்டம் ஒரு புதிய சலுகையாகும், இது நிச்சயமாக பலரால் பாராட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ALSO READ | WoW! சூப்பர் ஆஃபர்! OTT சந்தாக்களுடன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் ரெடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More