Home> Technology
Advertisement

Twitter vs Income: விளம்பரம் கொடுப்பவர்களின் சக்தியை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்: எலோன் மஸ்க்

சமீபத்தில் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மாறிய எலோன் மஸ்க், Twitter Blue இல் பல மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார்...

Twitter vs Income: விளம்பரம் கொடுப்பவர்களின் சக்தியை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்: எலோன் மஸ்க்

அண்மையில் எலோன் மஸ்க், பிரபல சமூக ஊடகமான  ட்விட்டரில் 9.2% பங்குகளை வாங்கியதாக செய்திகள் வெளியாகின. அதில் இருந்து எலோன் மஸ்கின் ஒவ்வொரு செயலும் சலசலப்பை உருவாக்கி வருகிறது. 

தகவல்களின்படி, நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் எலோன் மஸ்கின் கருத்துக்கள் அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலில் எடிட் பொத்தானின் சாத்தியம் பற்றிய அவரின் கருத்து வைரலானதைப் போலவே தற்போது ட்விட்டர் ப்ளூ தொடர்பான கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி, தொடர்ச்சியான ட்வீட்களில், Twitter Blue இல் பல மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார். ட்விட்டர் ப்ளூ என்பது கட்டண மாதாந்திர சந்தா சேவையாகும், இது பிரீமியம் அம்சங்களுக்கான பிரத்யேக அணுகலை வழங்குகிறது.

மேலும் படிக்க | Taflon coating: காரில் டெஃப்ளான் கோட்டிங் உண்மையில் நன்மை பயக்குமா

டிவிட்டர் பயனர்கள் தங்கள் ட்விட்டர் அனுபவத்தைத் தனிப்பயனாக்க உதவும் டிவிட்டர் ப்ளூ, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் OS மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் twitter.com இல் கிடைக்கிறது.
டிவிட்டர் ப்ளூவின் சேவையைப் பயன்படுத்த மாதத்திற்கு $2.99 ​​(ரூ. 227) கட்டணம் செலுத்தவேண்டும்.

இப்போது, ​​தி போரிங் கம்பெனி நிறுவனர் இந்தச் சேவைக்கு மாதத்திற்கு சுமார் $2 (ரூ. 152) செலவாகும் என்று பரிந்துரைத்துள்ளார். மோசடிகள் மற்றும் ஸ்பேம் நபர்களை இயக்குவதற்கு சேவையைப் பயன்படுத்தும் கணக்குகளிடம் இருந்து இதற்கு பிறகு கட்டணத்தை பெறக்கூடாது என்றும், அவர்களுக்கான சேவை இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் மஸ்க் பரிந்துரைத்துள்ளார். 

"விலை $2/ மாதம் என்று மாற்றப்படலாம். ஆனால் 12 மாதங்களுக்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்பதோடு, கணக்கில் 60 நாட்களுக்கு செக்மார்க் கிடைக்காது (CC சார்ஜ்பேக்குகளைப் பார்க்கவும்). மோசடி/ஸ்பேம் அக்கவுண்ட் என்று தெரியவந்தால், அவர்களிடம் இருந்து தொடர்ந்து பணத்தைத் திரும்பப் பெறாமல், சேவை இடைநிறுத்தப்பட வேண்டும்" என்று மஸ்க் ஒரு ட்வீட்டில் எழுதினார்.  

 

இது தவிர, ட்விட்டர் ப்ளூவில் பதிவு செய்யும் அனைவரும், மோசடி செய்பவர்கள் மற்றும் அங்கீகாரச் சரிபார்ப்பு அடையாளத்தைப் பெற வேண்டும் என்று மஸ்க் பரிந்துரைத்துள்ளார். 

இந்த தேர்வுக்குறிகள் பொது நபர்கள் அல்லது அதிகாரப்பூர்வ கணக்குகளிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று மஸ்க் கூறுகிறார். 

கடைசியாக, ட்விட்டர் புளூவில் எந்த விளம்பரங்களும் இருக்கக்கூடாது என்று எலோன் மஸ்க் பரிந்துரைத்துள்ளார். "ட்விட்டர் விளம்பரப் பணத்தைச் சார்ந்து இருந்தால், விளம்பரம் கொடுக்கும் நிறுவனங்களின் சக்தி முன்னிலைப்படுத்தப்படுகிறது" என்று மஸ்க் கூறினார்.

மேலும் படிக்க | பட்ஜெட் விலையில் அடுத்த வாரம் இந்தியாவில் இந்த சிறந்த கார்கள் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More