Home> Technology
Advertisement

WhatsApp Update: 32 பேர் ஒரே நேரத்தில் போன் பேசலாம்..! வாட்ஸ்அப்பில் வேற லெவல் அப்டேட்

வாட்ஸ்அப்பில் விரைவில் வர இருக்கும் புதிய அப்டேட்டுக்குப் பிறகு ஒரே நேரத்தில் 32 பேர் வரை வாய்ஸ் காலும், 8 பேர் வரை வீடியோ அழைப்பும் மேற்கொள்ள முடியும்.   

WhatsApp Update: 32 பேர் ஒரே நேரத்தில் போன் பேசலாம்..! வாட்ஸ்அப்பில் வேற லெவல் அப்டேட்

வாட்ஸ்அப் அப்டேட்

வாட்ஸ்அப் பல்வேறு புதிய அப்டேட்டுகளை செய்து கொண்டே இருக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், போட்டி நிறுவனங்களுக்கு மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்கும் வகையிலும் அம்சங்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் 32 பேர் வரை வாய்ஸ் கால் பேசவும், 8 பேர் வரை ஒரே நேரத்தில் வீடியோ கால் பேசும் அம்சத்தையும் வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. இந்தியாவை மனதில் வைத்தே வாட்ஸ்அப்பில் இந்த அப்டேட் கொண்டு வரப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருந்தாலும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகம். 

மேலும் படிக்க | 15,000 ரூபாய்க்குள் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா...!

மார்க் ஜூக்கர்பெர்க் பிளான்

இதனால், இங்கு வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அப்டேட்டை கொண்டு வர இருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். இது குறித்து வெளியாகியிருக்கும் தகவலில், வாட்ஸ் அப்பின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், விண்டோஸ் இயங்கு தளத்திற்காக புதிய வாட்ஸ் அப்பை அறிமுகப்படுத்தப் போவதாக கூறியுள்ளார்.  இந்த புதிய அப்டேட்டில் , வாட்ஸ் அப்பில் 8 நபர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ கால் பேச முடியும். 32 நபர்கள் வரை ஒன்றாக சேர்ந்து வாய்ஸ் கால் பேச முடியும். இவை அனைத்துமே கணினி வழியாக மட்டுமே செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மார்க்கின் பேஸ்புக் பதிவு 

பேஸ்புக்கில் மார்க் ஜூக்கர்பெக் இதுகுறித்து எழுதியிருக்கும் பதிவில், விண்டோஸ் இயங்குதளத்திற்கான புதிய வாட்ஸ்அப் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதில் 8 பேர் வரை வீடியோ கால் பேசலாம், 32 பேர் வரை ஒரே நேரத்தில் வாய்ஸ் காலில் இணைந்து கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த புதிய இயங்குதளத்தில் இயங்கும் வாட்ஸ்அப் மொபைல் வாட்ஸ்அப் செயலியை விட மிக வேகமாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற டிவைஸ்களுடன் வாட்ஸ்அப் இணைப்பதில் இருக்கும் சிக்கல்களுக்கும் இந்த அப்டேட்டில் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Reliance Jio Plans: 11 மாதங்களுக்கு இனி ரீச்சார்ஜ் கவலையில்லை - ஜியோவின் மலிவான பிளான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More