Home> Technology
Advertisement

உங்கள் மொபைலில் WhatsApp வேலை செய்யவில்லையா? காரணம் உள்ளே!

புத்தாண்டில் காலடி எடுத்துவைத்த நாளை அடுத்து தற்போது, சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் மொபைலில் WhatsApp வேலை செய்யவில்லையா? காரணம் உள்ளே!

புத்தாண்டில் காலடி எடுத்துவைத்த நாளை அடுத்து தற்போது, சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னதாகவே வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்ததாவது... டிசம்பர் 31-ம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை கீழ்காணும் இயங்குதளத்திற்கு நிறுத்தப்படும் என அறிவிதிருந்தது. அந்தவகையில்

  • பிளாக்பெரி ஓ.எஸ்
  • பிளாக்பெரி 10
  • விண்டோஸ் போன் 8.0 

உள்ளிட்ட இயங்குதள மொபைல் சாதனங்களில் சேவை நிறுத்தப்பட்டது!

அதேபோல், இந்தாண்டு டிசம்பரில் "Nokia S40" இயங்குதளத்தில் நிறுத்தப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து Android OS version 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில் பிப்ரவரி 1, 2020-க்குப் பின்னர் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது எனவும் அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாக்கில் நோக்கியா எஸ்60 தளங்களில் வாட்ஸ்அப் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்ககது.

வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்ட தளங்களில் பட்டியல்:-

  • ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் பழைய பதிப்பு
  • விண்டோஸ் போன் 7
  • ஐபோன் 3GS / iOS 6
  • நோக்கியா சிம்பியன் S60
Read More