Home> Technology
Advertisement

சிவப்பு டிக்கில் எச்சரிக்கை செய்யும் வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட்!!

வாட்ஸ் அப் செயலியில் பகிரப்படும் செய்திகள் உண்மையானவையா அல்லது வதந்தியா என பயனாளர்கள் தெரிந்துக்கொள்ள புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

சிவப்பு டிக்கில் எச்சரிக்கை செய்யும் வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட்!!

எந்த செய்தியாக இருந்தாலும் உடனுக்குடன் பகிர்வதில் முக்கிய பங்கு வாட்ஸ் அப் செயலி வகித்து வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. சமூக வலைத்தளங்களிலே வாட்ஸ் அப் மூலம் மட்டுமே அசுர வேகமாக செய்திகள் பரவுகின்றன. அந்த செய்திகள் வந்தந்தியா? அல்லது உண்மையானவையா? பொய்யானவையா? என்று யாரும் ஆராய்வது இல்லை. தனக்கு ஒரு செய்தி பார்வார்டு மூலம் வந்தால், அதை அப்படியே மற்றவர்களுக்கு பார்வார்டு செய்யப்படுகிறது. 

fallbacks

அப்படி செய்வதன் மூலம் பல அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக, இந்தியா முழுவதும் "குழந்தை கடத்தல்" என்ற வதந்திகளை நம்பி பலபேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். சாதாரணமாக யாரவது குழந்தை அருகில் சென்றாலே, அவர்களைக் குழந்தை திருடும் கும்பல் என நினைத்து, ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரைத் கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களினால், இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 30 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெவித்துள்ளனர். உலக முழுவதும் இப்படி வதந்திகள் பரப்படுகிறது.

இதையடுத்து, வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டுவரும் வதந்திகளால், தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரித்தது.

இந்நிலையில், தற்போது வாட்ஸ்-அப் செயலி புதிய அம்சம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் போலியானதா செய்தியாக இருந்தால், புதிய அம்சம் பயனாளர்களை எச்சரிக்கை செய்யும். மேலும் அனுப்பப்படும் செய்திகள் நேரடியாக அச்சு செய்யப்பட்டதா? அல்லது பார்வார்டு செய்யப்பட்டதா? என சுட்டிக்காட்டும் வசதியும் உள்ளது. 

இதன் மூலம் வதந்திகள் பகிரப்படுவது பெருமளவு குறையும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More