Home> Technology
Advertisement

V21 5G: குறைந்த விலையில் கிடைக்கிறது விவோ போன்

Flipkart Mobile Bonanza விற்பனையில், வாடிக்கையாளர்கள் Vivo V21 5G ஐ நல்ல தள்ளுபடி விலையில் வீட்டிற்கு கொண்டு வரலாம்.

V21 5G: குறைந்த விலையில் கிடைக்கிறது விவோ போன்

பிளிப்கார்ட்டில் மொபைல் போனான்ஸா விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் நோ-காஸ்ட் இஎம்ஐ, முழுமையான மொபைல் பாதுகாப்பு மற்றும் சிறந்த பரிவர்த்தனைகளின் பலன்களைப் பெறலாம். பட்ஜெட் முதல் பிரீமியம் வரையிலான போன்கள் இங்கு குறைந்த விலையில் கிடைக்கின்றன, ஆனால் விவோ வி21 5ஜி என்ற சிறப்பு மிட்-ரேஞ்ச் போன் பற்றி பேசினால், வாடிக்கையாளர்கள் இந்த போனை நல்ல தள்ளுபடி விலையில் வீட்டிற்கு கொண்டு வரலாம்.

கிடைத்த தகவலின்படி, விவோ வி21 5ஜி ஐ 32,990 ரூபாய்க்கு பதிலாக வெறும் 20,990 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த போனின் மிக முக்கியமான அம்சம் என்ன்வென்றால் அதன் 44 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா ஆகும். இது விவோவின் 'கிரேசிஸ்ட் ஆஃபர்' என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்

இந்த போனில் 6.44 இன்ச் முழு எச்டி + அமோல்ட் டிஸ்ப்ளே உள்ளது. திரையின் புதுப்பிப்பு வீதம் 90 ஹெர்ட்ஸ் ஆகும். டிஸ்ப்ளேவில் வாட்டர் டிராப் நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. டைமென்சிட்டி 800யூ சிப்செட் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. சாதனம் எக்ஸ்டெண்டெட் ரேம் என்ற அம்சத்தைக் கொண்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனின் இன்டர்னல் மெமரியைப் பயன்படுத்தி 3 ஜிபி வரை வர்ச்சுவல் ரேமைப் பெறலாம். இந்த ஸ்மார்ட் தொலைபேசி டஸ்க் ப்ளூ, சன்செட் டேசில் மற்றும் ஆர்க்டிக் ஒயிட் வண்ணங்களில் வருகிறது.

44 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கிடைக்கும்
கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த போனில் 44 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் ஐ ஆட்டோ ஃபோகஸுடன் வருகிறது. தொலைபேசியின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. பின்புறத்தில் ஓஐஎஸ் உடன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. தொலைபேசியில் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உள்ளது.

இணைப்பு விருப்பங்களில் 5ஜி, 4ஜி லைட், வைபை, ப்ளூடூத், வி5.1, ஜிபிஎஸ்/ஏ ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். விவோ போனில் 4,000எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது, இது 33வாட் ஃப்ளாஷ்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

மேலும் படிக்க | ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More