Home> Social
Advertisement

வீடியோ: ஒரே நேரத்தில் 1,300 ரோபோக்கள் நடனமாடி உலக சாதனை!

ஒரே நேரத்தில் 1,300 ரோபோக்கள் நடனமாடி உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளது..! 

வீடியோ: ஒரே நேரத்தில் 1,300 ரோபோக்கள் நடனமாடி உலக சாதனை!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோபோக்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக நடனமாடி உலக கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. 

இத்தாலி நாட்டில் நிகழ்ந்தப்பட்ட இந்த சாதனையில் சுமார் 1,372 ரோபோக்கள் இடம்பெற்றன. ரோபோக்கள் இசையகபட்ட இசைக்கு ஏற்றார் போல் நடனமாடியது காண்போர் கண்களுக்கு விருந்தாகியது மட்டும் இன்றி வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

fallbacks

இது போன்ற ரோபோக்கள் தயாரித்து, அதனை பெரிய அளவில் நடனமாட வைக்கும் முயற்சியானது கடந்த 2016-ம் ஆண்டு முதல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. இதுவரையில் 2017-ம் ஆண்டு சீனாவில் நிகழ்ந்த்தப்பட்ட ரோபோ நடனம் தான் மிகப்பெரியதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் சுமார் 1069 ரோபோக்கள் இடம்பெற்று நடனமாடியது. தற்போது அந்த சாதனை முரியடுத்தது இத்தாலிய ரோபோ நடனம். 

fallbacks

இத்தாலியில் சுமார் 1,372 ரோபோக்கள் ஒன்றாக நடனமாட வைக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ரோபோக்கள் ஒவ்வொன்றும் சுமார் 40 செ.மீ உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இவை ஆல்பா 1 எஸ் வகை ரோபோக்கள். அலுமினியத்துடன் பிளாஸ்டிக் கலந்த மெடிரியலை கொண்டு இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

ரோபோக்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Read More