Home> Technology
Advertisement

ட்விட்டரின் புதிய அப்டேட்: இனி ஒரு ட்வீட்டை 20 நபர்களுக்கு சேர் செய்யலாம்

சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் ட்விட்டரில், பயனர்கள் இனி ஒரு ட்வீட்டை 20 நபர்களுக்கு ஒரே சமயத்தில் டிஎம்-மில் (DM) பகிரலாம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அறிவித்தது ட்விட்டர் நிறுவனம்.

ட்விட்டரின் புதிய அப்டேட்: இனி ஒரு ட்வீட்டை 20 நபர்களுக்கு சேர் செய்யலாம்

சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் ட்விட்டரில், பயனர்கள் இனி ஒரு ட்வீட்டை 20 நபர்களுக்கு ஒரே சமயத்தில் டிஎம்-மில் (DM) பகிரலாம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அறிவித்தது ட்விட்டர் நிறுவனம்.

டிவிட்டரில் பொதுவாக ஒரு ட்வீட்டை பலருக்கு தனியாக பகிரும் போது தவறுதலாக குழுக்களிலும் அது பகிரப்படுகிறது.  இப்போது அந்த பிரச்சனைகளை இல்லாமல் தடுக்க ஒரே ட்வீட்டை 20 வெவ்வேறு நபர்களின் டிஎம் (DM) மிற்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது  டிவிட்டர் நிறுவனம்.  இந்த புதிய அப்டேட் ஐஓஎஸ் (IOS) மற்றும் கணினிகளில் (System) ட்விட்டர் பயன்படுத்துவதற்கு முதலில் வருகிறது. ஆண்ட்ராய்டில் (Android) டிவிட்டர் பயன்படுத்துவதற்கு இந்த வசதி கொஞ்சம் தாமதமாக வரும் என்று தெரிவித்துள்ளது.

ALSO READ Fleets-க்கு Bye Bye சொன்னது டிவிட்டர்! இந்த அம்சம் இன்றே கடைசி!!

இதற்கு முன் டிஎம்மில் (DM) வரும் மெசேஜ்களுக்கு டபுள் கிளிக் செய்தால் எமோஞ்சி (Emonji) மூலம் பதிலளிக்கலாம்.  இனி அதற்கு பதிலாக அந்த பதிவை லாங் பிரஸ் (Long press)  செய்வதன் மூலம் பதில் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.  இந்த புதிய வசதியும் முதலில் ஐஓஎஸ் (IOS) பயனர்களுக்கு வரும் என்று கூறியுள்ளது.  மேலும் ஐஓஎஸ் (IOS) பயனாளர்களின் டிஎம் ஐகான் (DM ICON) குறியும் மாறுகிறது.

மேலும் குழுக்களில் குறிப்பிட்ட செய்தியை தேடி எடுக்க இனி தேதி வாரியாக பிரித்து வேண்டிய செய்தியை சுலபமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.  மேலும் சாட் (Chat) செய்யும் இடத்தில் புதிதாக மெசேஜ் (Message) வந்தால் அதனை பார்க்க மேலே செல்வதற்கு புதிய வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த வசதி ஆண்ட்ராய்ட் (Android) மற்றும் ஐஓஎஸ் (IOS) என இருவருக்குமே வழங்கப்படவுள்ளது. 

தற்போது இந்திய பயனர்களுக்கு மட்டும் டிஎம்மில் (DM) 140 வினாடிகளுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி சோதனையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More