Home> Technology
Advertisement

வெறும் ரூ1949க்கு இந்த போக்கோ போனை வாங்க அரிய வாய்ப்பு

போகோ எம்4 ப்ரோ ஆனது பம்பர் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் வங்கி சலுகைகள் மூலம் மலிவு விலையில் விற்கப்படுகிறது.

வெறும் ரூ1949க்கு இந்த போக்கோ போனை வாங்க அரிய வாய்ப்பு

குறைந்த விலையில் பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன் கிடைப்பது மிகவும் கடினம். ஆனால் குறைந்த விலையில் வலுவான அம்சங்கள் கொண்ட போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இன்று உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. இந்த கட்டுரையில் இன்று நாம் போகோ எம்4 ப்ரோ பற்றி காண உள்ளோம், இதில் பம்பர் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி நீங்கள் ரூ.2000க்கும் குறைவான விலையில் பிளிப்கார்ட் இலிருந்து போகோ எம்4 ப்ரோ ஐ வாங்கலாம். எப்படி என்று இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

போனின் சிறப்பை தெரிந்து கொள்ளுங்கள்
போகோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஹீலியோ ஜி96 பிராசஸர், யுஎஃப்எஸ் 2.2 ரைட்பூஸ்டர் மற்றும் லிக்விட் கூலிங் டெக்னாலஜியுடன் வருகிறது மற்றும் பிளிப்கார்ட்டில் 25 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் மாதிரி விகிதத்துடன் 6.43 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 5000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 33வாட் வேகமான சார்ஜிங் இதில் உள்ளது.

மேலும் படிக்க | ரியல் மீ ஸ்மார்ட்போனை ரூ.266-க்கு வாங்க அருமையான வாய்ப்பு 

அத்துடன் இந்த போனில், 64எம்பி பின்புற கேமராவுடன் டிரிபிள் கேமரா அமைப்பையும், 118 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூவுடன் 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸையும் பெறுவீர்கள். செல்ஃபிக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. 

வெறும் ரூ.2000 ரூபாய்க்கு போகோ எம்4 ப்ரோ ஐ வாங்கலாம்
உண்மையில், போகோ எம்4 ப்ரோ இன் ஒரிஜினல் விலை 19,999 ஆகும், ஆனால் பிளிப்கார்டில் இதை ரூ.14,949 க்கு வாங்கலாம். அதன்படி 25 சதவீத தள்ளுபடியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் இதில் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. அதன்படி போனில் ரூ.13,000 வரை தள்ளுபடி பெறலாம், இதன் படி போனின் விலை ரூ.1949 ஆகக் குறைக்கப்படுகிறது. இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகைக்கான விலையானது பழைய போனின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்து இருக்கும்.

பிளிப்கார்ட் போகோ எம்4 ப்ரோ மீது பல வங்கி சலுகைகளையும் வழங்கப்படுகிறது
1. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.250 தள்ளுபடி பெறுங்கள்.

2. எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடி, ரூ.5000 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ரூ.750 வரை தள்ளுபடி.

3. எஸ்பிஐ கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10% தள்ளுபடி, ரூ.5000 மற்றும் அதற்கு மேல் ஆர்டர் செய்தால் ரூ.1000 வரை தள்ளுபடி.

4. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் கூடுதல் ரூ.1000 தள்ளுபடி.

5. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக்.

6. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் ரூ.1000 தள்ளுபடி.

மேலும் படிக்க | பிரைவசியில் அடுத்த அதிரடி! மொபைல் நம்பர், முகவரியை நீக்க உதவும் கூகுள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More