Home> Technology
Advertisement

இண்டர்நெட் வேகம் பன்மடங்கு அதிகரிக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்...

இண்டர்நெட் வேகம் குறைவாக இருப்பது ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு இருக்கும் ஒரு சர்வ சாதாரணமான பிரச்சனை

இண்டர்நெட் வேகம் பன்மடங்கு அதிகரிக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்...

ஸ்மார்ட்போன் இல்லாத வீடுகளைப் பார்க்க முடியாது. ஒரு வீட்டில் இரண்டு முதல் நான்கு ஸ்மார்ட்போன்கள் இருக்கும் வீடுகள் கூட இருக்கின்றன. குறிப்பாக, இண்டர்நெட் வேகம் மற்றும் டேட்டா பேக்குகள் மலிவான விலையில் கிடைக்க தொடங்கிய பிறகு, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. சீரியல் பார்ப்பது முதல் ஆஃபீஸ் வொர்குகள் வரை என அனைத்தும் ஸ்மார்ட்போன்கள் வழியாகவே செய்துவிட முடியும்.

ஆனால், இதற்கு இண்டர்நெட் வேகம் என்பது கட்டாயம் அவசியம். அவை சில நேரங்களில் வழக்கத்தைவிட குறைவான வேகத்தில் இருக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு கடுப்பாக இருக்கும். இண்நெட் புரொவைடரில் பிரச்சனையாக இருந்தால் நம்மால் எதுவும் செய்ய இயலாது. அதேநேரத்தில், மற்றவர்கள் மொபைலில் இன்டர்நெட்வேகம் அதிகமாக இருந்து, உங்கள் மொபைலில் மட்டும் வேகம் குறைவாக இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் சில செட்டிங்ஸூகளை மாற்ற வேண்டும். 

மேலும் படிக்க | அற்புதமான சாம்சங்கின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

அவ்வாறு செய்யும்போது, முன்பைவிட இண்டர்நெட் வேகம் பன்மடங்கு அதிகரிக்கும். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது கூகுள் ஹிஸ்டிரியில் இருக்கும் Cache-களை நீக்க வேண்டும். அவற்றை நீக்கும்போது உங்கள் ஸ்மார்ட்போனின் இணைய வேகம் அதிகரிக்கும். தேவையில்லாமல் ஆக்கிரமித்திருக்கும் cache -களை ஸ்பேஸால் இணைய வேகம் குறைய வாய்ப்புகள் உள்ளன. 

அடுத்ததாக மொபைல் ஸ்டோரேஜ் முழுமையாக இருந்தாலும் உங்களின் ஸ்மார்டபோனின் வேகம் குறைவாக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால், மொபைல் ஸ்டோரேஜை கூடுமானவரை 80 விழுக்காட்டுக்கும் குறைவாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். மொபைலில் இருக்கும் தேவையற்ற பைல்களை நீக்குவதன் மூலம் மொபைல் ஸ்டோரேஜ் அதிகரிக்கும். மேலும், விளம்பர தடுப்பான்கள் இருந்தாலும் நெட்வொர்க் ஸ்லோவாக இயங்கும். 

அதிகமான விளம்பரங்கள் வருவதை தடுக்க ஆட் பிளாக்கரை பயன்படுத்துகிறார்கள். இதை குறிப்பிட்ட சில தளங்களுக்கு மட்டும் உபயோகித்தால், இணைய வேகம் அதிகரிக்கும். கடைசியாக, மொபைல் நெட்வொர்க் 4 ஜியாக மாற்றுங்கள். இவற்றையெல்லாம் செய்தால், உங்கள் ஸ்மார்ட்போனின் வேகம் முன்பை விட வேகமாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மேலும் படிக்க | டேட்டிங் செய்பவர்களுக்கு சூப்பர் வசதியை வழங்கும் Tinder App

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More