Home> Technology
Advertisement

விவசாயத்திற்கு ட்ரோன்களை பயன்படுத்த நிதியுதவி அளிக்கப்படும் - வேளாண் அமைச்சகம்!

விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ட்ரோன்களை செயல்படுத்த மத்திய வேளாண் அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.   

விவசாயத்திற்கு ட்ரோன்களை பயன்படுத்த நிதியுதவி அளிக்கப்படும் - வேளாண் அமைச்சகம்!

விவசாயத்தில் ட்ரோன்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், விவசாய ட்ரோன்களை குறைந்த விலையில் வாங்குதல், பயன்படுத்துதல் மற்றும் அதனை கையாளும் விதம் ஆகியவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  ICAR, க்ரிஷி விக்யன் கேந்திராஸ் மற்றும் மாநில விவசாய பல்கலைக்கழகங்கள் ட்ரோன் வாங்குவதற்கு "SMAM (Sub-Mission on Agricultural Mechanisation)" திட்டம் 100% அல்லது ரூ. 10 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது.  இது விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) ட்ரோன்களை வாங்குவதற்கு 75% மானியத்தை வழங்குகிறது. 

ALSO READ | Budget 2022: பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன?

ட்ரோன்களை வாடகைக்கு அளிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும், ட்ரோன்களை வாங்கும் நிறுவனங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,000 வழங்கப்படும்.  விவசாயிகள், FPOக்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் கூட்டுறவு சங்கம் மூலம் ட்ரோன் வாங்குவதற்கு 40% அல்லது ரூ. 4 லட்சம் வரை மானிய நிதியுதவி அளிக்கப்படும் என்று இந்திய ட்ரோன் கூட்டமைப்பு தலைவர்(Drone federation of India) ஸ்மித் ஷா கூறியுள்ளார். 

fallbacks

வேளாண் பட்டதாரிகளுக்கு ட்ரோன் வாங்குவதற்கு 50% அல்லது ரூ. 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ட்ரோன்களை வாங்குவதற்கு மாநில அரசில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் அவை சரிபார்க்கப்பட்டு ட்ரோன் வழங்க வழிவகை செய்யப்படும்.   வேளாண் ஆராய்ச்சி மற்றும் விவசாயப் பயிற்சி நிறுவனங்களுக்கு 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய ட்ரோன் மாதிரிகள் இலவசமாக வழங்கப்படும். 

fallbacks

FPOக்கள், CHCகள் மற்றும் விவசாயத் தொழில்முனைவோர்களுக்கு மானிய விலையில் ட்ரோன்களை வழங்குவதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்த உதவுவதோடு, எளியவர்களும் ட்ரோன்களை பயன்படுத்த முடியும் என்று ஸ்மித் ஷா கூறியுள்ளார்.

ALSO READ | Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More