Home> Technology
Advertisement

Tecno Spark Go 2021 இன்று முதல் விற்பனை; பல அசத்தலான ஆபர் அறிவிப்பு

Tecno Spark Go 2021 இன் முதல் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அமேசானில் ஏற்பாடு செய்யப்படும்.

Tecno Spark Go 2021 இன்று முதல் விற்பனை; பல அசத்தலான ஆபர் அறிவிப்பு

Tecno Spark Go 2021: சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் Tecno Spark Go 2021 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனின் விலை ரூ .8,000 க்கும் குறைவாக நிர்ணயிக்கபட்டுள்ளது. குறைந்த விலையில் மற்றும் நல்ல ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், Tecno Spark Go 2021 சிறந்த சாய்ஸ் ஆகும். 

Tecno Spark Go 2021 முதல் விற்பனை இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் (SmartPhone) பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. எனவே டெக்னோ ஸ்பார்க் கோ 2021 இல் என்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.

ALSO READ | Smartphones: ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான போன்கள் இதோ

இந்த போனின் விலை ரூ .7,299 ஆகும். 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் இந்த தொலைபேசி வருகிறது. கேலக்ஸி ப்ளூ, ஹொரைசன் ஆரஞ்சு மற்றும் மாலத்தீவு ப்ளூ கலர் விருப்பங்களில் வாங்கலாம். இதன் விற்பனை இன்று மதியம் 12 மணி முதல் இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசானில் நடைபெறும். விற்பனையின் போது, அறிமுக சலுகையுடன் போனை வெறும் ரூ .6,699 க்கு நீங்கள் வாங்க முடியும்.

Tecno Spark Go 2021 இல் அண்ட்ராய்டு 11 இன் கோ பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 720x1600 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்ட 6.52 இன்ச் HD + டிஸ்ப்ளே உள்ளது. டிஸ்பிளே பிரகாசம் 480 நிட் ஆகும். தொலைபேசியில் மீடியாடெக் ஹீலியோ ஏ 20 ப்ரோசெசர் , 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது, இது மெமரி கார்டு உதவியுடன் 256 ஜிபி வரை அதிகரிக்கலாம். டெக்னோ ஸ்பார்க் கோ 2021 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முதன்மை லென்ஸ் 13 மெகாபிக்சல்கள், இரண்டாவது லென்ஸ் AI, முன்பக்கத்தில், எஃப் / 2.0 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 4.2 மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்  உள்ளது. அத்துடம் இது 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

ALSO READ | 10,000 க்கும் குறைவாக விலையில் 6GB RAM தொலைபேசி அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More