Home> Technology
Advertisement

Jio-Airtel-Vi இன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் இவையே! Benefits என்ன

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன.

Jio-Airtel-Vi இன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் இவையே! Benefits என்ன

புதுடெல்லி: கடந்த ஒரு வாரத்தில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இந்த திட்டங்கள் முந்தையதை விட விலை உயர்ந்ததாக இருந்தாலும், இன்னும் மூன்று நிறுவனங்களும் 400 ரூபாய்க்கும் குறைவான பல திட்டங்களை வழங்குகின்றன. இந்த திட்டத்தில் பயனர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர். இந்தத் திட்டங்களைப் பற்றி இங்கே விரிவாக காண்போம். 

Reliance Jio மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோ (Reliance Jio) தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை நேற்று உயர்த்தியுள்ளது மற்றும் புதிய விலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும். ஜியோவின் ரூ.129 திட்டம் தற்போது ரூ.159 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில், நிறுவனம் பயனருக்கு மொத்தம் 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

ALSO READ | வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி

ஜியோவின் இரண்டாவது திட்டம் ரூ 179 ஆகும், இதில் பயனர் ஒவ்வொரு நாளும் 1 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவார். பயனர்கள் இந்த திட்டத்தை 24 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் முன்னதாக ரூ.149 ஆக இருந்தது.

ரூ. 400க்கு கீழே Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல்லின் (Airtel) ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி பேசுகையில், அவற்றின் விலையும் நவம்பர் 26 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல்லின் ரூ.149 திட்டம் தற்போது ரூ.179 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில், நிறுவனம் பயனருக்கு மொத்தம் 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

ஏர்டெல் நிறுவனம் 299 ரூபாய்க்கு மற்றொரு திட்டத்தையும் கொண்டுள்ளது. இதில், பயனர் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும். இதன் விலை முன்னதாக ரூ.249 ஆக இருந்தது.

Vodafone-Idea (Vi) வழங்கும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள்
வோடபோன் ஐடியாவும் (Vodafone Idea) ஏர்டெல் போன்று தனது திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. ரூ.149 விலையுள்ள திட்டம் தற்போது ரூ.179க்கு பயனர்கள் பெறுவார்கள். இந்த திட்டத்தில், பயனர் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு, மொத்தம் 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளைப் பெறுவார்.

Vi இன் ரூ.249 திட்டம் தற்போது ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், நிறுவனம் பயனருக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.

இவை ஜியோ, ஏர்டெல் மற்றும் வியின் ப்ரீபெய்ட் திட்டங்களாகும், இதன் விலை ரூ. 400 க்கும் குறைவாக உள்ளது, இதில் வரம்பற்ற குரல் அழைப்பு முதல் டேட்டா வரை பல நன்மைகளை பெறுகிறீர்கள்.

ALSO READ | Jio vs Airtel vs Vi: உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் ரீசார்ஜ் திட்டம் எது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More