Home> Technology
Advertisement

'ஜாக்கிரதை' கூகுள் க்ரோம் குறித்து அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

கூகுள் க்ரோம் மிக அதிக பாதிப்புகளை கொண்ட பாதுகாப்பற்ற பிரௌசர் என சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

'ஜாக்கிரதை' கூகுள் க்ரோம் குறித்து அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அக்டோபர் 5 2022 வரையிலான தரவுகளை வைத்து, Atlas VPN என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், இந்த அக்டோபரின் ஐந்து நாள்களில் மட்டும் புதிய பாதிப்புகளை கொண்ட ஒரே பிரௌசர் என்றால், அது கூகுள் க்ரோம்தான் என தெரிவித்துள்ளது.  CVE-2022-3318, CVE-2022-3314, CVE-2022-3311, CVE-2022-3309, CVE-2022-3307 என பாதிப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. 

Common Vulnerabilities and Exposures என்பதன் சுருக்கமான CVE செயல்பாடு, பல தளங்களில் இருக்கும் பாதுகாப்பு குறைப்பாடுகள் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்கிறது. கூகுள் நிறுவனத்தின் க்ரோம் பிரௌசரில் 2022ஆம் ஆண்டில் மட்டும் 303 பாதிப்புகளும், ஒட்டுமொத்தமாக 3,159 பாதிப்புகளும் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | உங்கள் பாஸ்வேர்டை திருடும் 400 ஆஃப்கள் - பேஸ்புக் விடுத்த எச்சரிக்கை

க்ரோமிற்கு அடுத்து?

இந்த பாதிப்புகள் சுட்டிக்காட்டப்பட்டாலும், அவற்றை இன்னும் விளக்கமாக எடுத்துரைக்கவில்லை. இருப்பினும், கணினியின் மெமரியை சிதைக்கும் அளவிற்கு இந்த பாதிப்புகள் வழிவகுக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் க்ரோமின் புதிய வெர்ஷனுக்கு (Version 106.0.5249.61.) அப்டேட் செய்து பயனாளிகள் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கூகுள் க்ரோமிற்கு அடுத்த இடத்தில், மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் 117 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மைக்ரோசாப்ட் எட்ஜ் 103 பாதிப்புகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளன. அது தொடங்கப்பட்ட தேதியில் இருந்து கடந்த அக். 5ஆம் தேதிவரை மட்டும் 806 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 

அடுத்த இடத்தில் சஃபாரி (Safari) வெறும் 26 பாதிப்புகளை கொண்டுள்ளது. அது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து மொத்தம் 1,139 பாதிப்புகள் அதில் இருந்துள்ளது. ஓப்ரா (Opera) பிரௌசரில் இந்தாண்டு எந்த பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை. மொத்தமாகவே, அதில் 244 பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.    

மேலும் படிக்க |  க்ரோமிற்கு அடுத்து? ஓலா, ஊபருக்கு தடை - அதிக கட்டணம் வசூலிப்பதால் அதிரடி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More