Home> Technology
Advertisement

மற்றொரு மைல்கல்லை அடையப் போகும் ஜியோ நிறுவனம்

Reliance Jio Launched Jio AirFiber: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது நாடு முழுவதும் ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மற்றொரு மைல்கல்லை அடையப் போகும் ஜியோ நிறுவனம்

ரிலையன்ஸ் ஜியோ ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகப்படுத்தியது: திங்களன்று அதன் 45வது ஏஜிஎம்மில், ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி சேவையின் தொடக்க தேதி உட்பட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த வெளியீட்டின் முக்கிய தயாரிப்பு ஜியோ ஏர்ஃபைபர் ஆகும். ஏற்கனவே மக்கள் ஜியோ ஃபைபரைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் தற்போது ஜியோ ஏர் ஃபைபர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த அறிமுகத்தை அடுத்து மக்கள் மனதில் ஜியோ ஏர் ஃபைபர் என்றால் என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதன் விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

ஜியோ ஏர்ஃபைபர் என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது?
ஜியோ ஏர்ஃபைபர் ஃபுல் வயர்லெஸ் சேவையாக இருக்கும். இது ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது அதிவேக இணைய இணைப்பை வழங்கும் வயர்லெஸ் ஒற்றை சாதன தீர்வு என்று கூறப்படுகிறது. அதாவது, எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், வயர்லெஸ் ஜியோ ஏர்ஃபைபரை வீடு, அலுவலகம் மற்றும் கடையில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம், உங்கள் வீடு அல்லது அலுவலகத்தை நொடிகளில் 5ஜி வைஃபை ஹாட்ஸ்பாடாக மாற்றலாம். அத்துடன் இந்தச் சாதனம் வேலை செய்ய மின்சக்தியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் உங்களைச் சுற்றியுள்ள பகுதி 5G வைஃபை ஹாட்ஸ்பாட்டாக மாற்றப்படும். ஒரே நேரத்தில் பல சாதனங்களில் அதிவேக இணையத்தை இது இயக்க முடியும்.

மேலும் படிக்க | ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரின் சிறப்பு சுதந்திர தின விற்பனையில் போன்களுக்கு தள்ளுபடி

விலை மற்றும் திட்டங்கள்:
இந்த சேவையின் மூலம், நிலையான பிராட்பேண்டில் முதல் 10 நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்புடைய டெமோவும் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நேரத்தில் நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகளை தாமதமின்றி சாதனத்தில் பார்க்கலாம். இதற்கிடையில் அதன் அதிகாரபூர்வ விலை மற்றும் திட்டம் குறித்து நிறுவனம் இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டவுடன், இதன் விலை மற்றும் திட்டங்கள் தொடர்பான தகவல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி கூறியதாவது
இதற்கிடையில் இது தொடர்பாக 45வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூறியதாவது, 2023-ஆம் ஆண்டு டிசம்பருக்கள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை ஜியோ அறிமுகப்படுத்தும். இந்தியா முழுவதும் இதற்கான கட்டமைப்பை உருவாக்க, ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்குள் சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ அறிமுகப்படுத்தும். அதன் பிறகு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மாதந்தோறும் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றார். 

மேலும் படிக்க | OPPO K10 5G -க்கு மெகா தள்ளுபடி: பிளிப்கார்ட்டில் முந்துங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More