Home> Technology
Advertisement

"போர்ட்" வசதிக்காக அலைமோதும் மக்கள்...ஐடியா கொடுத்த ஏர்செல்!

ஏர்செல் சேவை நாளை முடக்கத்தால் வேறு நிறுவனத்திற்கு மாற பொது மக்கள் அலை மோதி வருவதால் இதர சேவை நிறுவனங்கள் இடையே போட்டி நிலவுகிறது.

ஏர்செல் சேவை நாளை முடக்கத்தால் வேறு நிறுவனத்திற்கு மாற பொது மக்கள் அலை மோதி வருவதால் இதர சேவை நிறுவனங்கள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஏர்செல் நிறுவனம் இந்த மாதம் மார்ச் 15-ம் தேதியுடன் முழுவதுமாக தனது சேவையை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்து உள்ளது. வாடிக்கையாளர்கள் அதற்குள் தங்களுக்கு விரும்பிய சேவையை தேர்வு செய்துகொள்ளும்படியும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாளையுடன் ஏர்செல் நிறுவனம்முடங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்ற பல்வேறு இடத்திற்கும் அலைந்து வருகின்றனர். 

போர்ட் வசதி மாற்றம் கோரி ஒரேநேரத்தில் மக்கள் நிறுவனங்களுக்கு படையெடுப்பதால் அவர்களை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிரமத்திலிருந்து தப்பிக்க எளிய வழியும் உள்ளது. ஏர்செல் மொபைல் சிக்னல் கடந்த சில வாரங்களாக தடைபட்டது. 

இதனால், அதன் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே ஏர்செல் வாடிக்கையாளர்கள் அந்நிறுவனம் ஒரேயொரு எஸ்.எம்.எஸ் அனுப்பி வேறு நிறுவன மொபைல் சேவைக்கு தங்களது எண்ணை மாற்றி சிரமத்திலிருந்து தப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏர்செல் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியதாக அந்நிறுவனம் தெரிவித்திருப்பது: -

> தங்களது மொபைல் செட்டிங்கில், நெட்வொர்க் செட்டிங் சென்று அங்கு நீங்களாகவே (Manually) நெட்வொர்க் சர்ச் செய்ய வேண்டும். 

> அதில் காண்பிக்கப்படும் நெட்வொர்க்கில் ஏர்டெல் 2-ஜியை தேர்வு செய்ய வேண்டும்.

> பின்பு PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்பினால் போதும். [PORT 1234567890 (send to 1900)]. 

> இதன் மூலம் மொபைல் போர்ட்டபிளிட்டி எட்டு இலக்கு எண் உங்களுக்கு 24 மணி நேரத்தில் கிடைக்கும். 

> அந்த எண் மூலம் நீங்கள் வேறு நெட்வொர்க் மொபைல் சேவைக்கு மாறலாம்.

> இந்த முறை மூலம் உங்ளது மொபைல் எண் மாறாது. 

பின்னர் வழக்கம்போல உங்களது எண்ணை நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம். இந்த சேவையிலும் பல குறைபாடுகள் நிலவுகிறது. சில சமயம் எஸ்.எம்.எஸ் செல்வதில்லை.

Read More