Home> Technology
Advertisement

No கேஸ், No மின்சாரம்.. வாழ்நாள் முழுவதும் இலவசமாக சாப்பாடு செய்யலாம்

Cooked Food For Free: எரிவாயு சிலிண்டர் மற்றும் மின்சாரம் இரண்டும் இல்லாமல் ஒரு முறை 12 ஆயிரம் ரூபாய் செலவழித்து வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவு சமைக்கலாம். 

No கேஸ், No மின்சாரம்.. வாழ்நாள் முழுவதும் இலவசமாக சாப்பாடு செய்யலாம்

Cooked For Free: எல்பிஜி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கேஸ் சிலிண்டர்களைத் தவிர்க்க பலர் இன்டக்‌ஷன் அடுப்புகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. ஒரு பக்கம் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மறுபக்கம் மின்சாரக் கட்டணம் உயர்வு என மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கேஸ் சிலிண்டர் அல்லது இண்டக்ஷன் பயன்படுத்தினால் அதிக பணம் செலவாகிறது. மாத பட்ஜெட் உயர்ந்துகொண்டு செல்கிறது. கவலை வேண்டாம். உங்கள் பணத்தை மிச்சப்படுத்தவும், இலவசமாக உணவு பொருட்களை சமைக்கலாம். அத்தகைய அடுப்பைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். எரிவாயு சிலிண்டர் மற்றும் மின்சாரம் இரண்டையும் அகற்றுவீர்கள். நீங்கள் ஒரு முறை 12 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் போதும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக உணவு சமைக்கலாம். 

வாழ்நாள் முழுவதும் இலவசமாக சமைக்கலாம்:
மக்களின் பணத்தை மிச்சபடுத்த ஒரு சிறப்பு தொழில்நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்தியு உள்ளது. இதன் மூலம் எரிவாயு அல்லது மின்சாரம் செலவழிக்காமல் உணவு சமைக்க முடியும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) பழைய சோலார் அடுப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சூர்யா நூதன் (Surya Nutan) என்ற சூரிய அடுப்பை அறிமுகப்படுத்தியு உள்ளது. பழைய சோலார் அடுப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த சோலார் அடுப்பை மேற்கூரையில் அல்லது வெயிலில் வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சூர்யா நூதன் அடுப்பை சமையலறையில் எளிதாக பொருத்திக் கொள்ளலாம். இதன் மற்றொரு அம்சம் என்னவென்றால், இது சாதாரண அடுப்பு போல இருக்கும்.

மேலும் படிக்க: மத்திய அரசு இணையதளத்தில் மலிவான விலையில் லேப்டாப்! பிளிப்கார்ட், அமேசான் வேண்டாம்

சூரிய நூதன் சோலார் ஸ்டவ் மற்ற சூரிய அடுப்புகளிலிருந்து வேறுபட்டது. இந்த அடுப்பில் இரண்டு அலகுகள் கிடைக்கும். ஒரு யூனிட் சமையலறையிலும் மற்றொன்று வெளியில் வெயிலிலும் வைக்கப்படும். இரவு நேரத்திலும் பயன்படுத்தலாம். இரவு நேரத்திலும் இயக்கலாம். பகலில் ஆற்றலைச் சேமித்து, இரவில் சீராக இயங்கும்.

சூர்யா நூதன் சோலார் ஸ்டவ் அம்சங்கள்:
- சூர்யா நூதன் சோலார் ஸ்டவ் மற்ற சூரிய அடுப்புகளிலிருந்து வேறுபட்டது.
- இந்த அடுப்பில் இரண்டு அலகுகள் கிடைக்கும்.
- அதன் ஒரு அலகு சமையலறையில் நிறுவப்படும்.
- இதன் மற்றொரு அலகு வெயிலில் வைக்கப்படும்.
- இரவிலும் இதைப் பயன்படுத்தலாம் என்பது இதன் முக்கிய அம்சம்.

சூர்யா நூதன் சோலார் ஸ்டவ் ரூ.12 ஆயிரம்:
சூர்யா நூதன் சோலார் ஸ்டவ் இரண்டு வகைகளில் வருகிறது. ஒன்றின் விலை 12 ஆயிரம் ரூபாயாகவும், டாப் வேரியண்டின் விலை 23 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் ஆயில் கேஸ் ஏஜென்சி மற்றும் பெட்ரோல் பம்ப் ஆகிய இடங்களில் இருந்து வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: தேவையற்ற அனைத்து WhatsApp படங்கள், வீடியோக்களை ஒரே நேரத்தில் நீக்குவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More