Home> Technology
Advertisement

Most Beautiful Car: இந்தியாவில் இதன் விலை, பிற விவரங்கள் இதோ

இந்த காரில் உள்ள மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் இதன் தோற்றத்தை மிகவும் விரும்புகிறார்கள். 

Most Beautiful Car: இந்தியாவில் இதன் விலை, பிற விவரங்கள் இதோ

புதுடெல்லி: ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியா, ஆடி இ-ட்ரான் ஜிடியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில், இந்த காரின் ஆரம்ப விலை ரூ.1.79 கோடி என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு காரில் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இது தவிர, இந்த காரில் (Car) உள்ள மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் இதன் தோற்றத்தை மிகவும் விரும்புகிறார்கள். 2021 கோல்டன்ஸ் லென்க்ராட் விருதுகளில் (Golden Steering Wheel) இந்த காருக்கு '2021 ஆம் ஆண்டின் உலகின் மிக அழகான கார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இரண்டு எலெக்ட்ரிக் கார்களும் இந்தியர்களின் மனதையும் மகிழ்விக்கின்றன

இந்திய சந்தையில் ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காரின் (Electric Car) இரண்டு வகைகள் உள்ளன. Audi e-tron GT Quattro மற்றும் Audi RS e-tron GT என பிரபலமாக அறியப்படும் இந்த இரண்டு கார்களும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 488 கிமீ வரையிலான பேட்டரி வரம்பைக் கொண்டுள்ளன. இவை இரண்டும் மணிக்கு 245 கிமீ வேகம் வரை செல்லும்.

ALSO READ: Honda SUV: முன்னணி கார்களுக்கு போட்டியாக சந்தையில் களம் இறங்கும் புதிய ஹோண்டா கார் 

ஆடி கார்களின் வடிவமைப்பு

ஆடி இ-ட்ரான் ஜிடி என்பது நான்கு கதவுகள் கொண்ட செடான் ஆகும். இது இந்தியாவில் ஜெர்மன் பிராண்டின் மின்சார வாகன (Electric Vehicles) வரிசையில் சேர்ந்துள்ளது. இந்த Audi e-tron GT மற்றும் RS e-tron GT ஆகிய இரண்டு மாடல்களின் வடிவமைப்பும் மிகவும் சிறப்பானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் வழங்கப்பட்டுள்ளது. அதன் பானட், முன்பக்க பம்பர் எவ்வளவு அருமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பாடியின் தோற்றத்தைப் பார்த்தாலே யூகிக்க முடியும்.

e-tron GT மற்றும் RS e-tron GT ஆகியவற்றின் இயக்க வரம்பு மற்றும் வேகம்

Audi e-tron GT மற்றும் RS e-tron GT ஆகியவை 93 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் மற்றும் இரண்டு மின்சார மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகின்றன. ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி 590 பிஎச்பி பவரையும், 830 என்எம் டார்க்கையும் பெறுகிறது. இந்த ஆடி கார் 4.1 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும். 

மின்சார செடானை ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 388 கிமீ முதல் 500 கிமீ வரை டபிள்யூஎல்டிபி ஓட்டும் வரம்பைக் கொண்டுள்ளது. வேகத்தைப் பொறுத்தவரை, இ-ட்ரான் ஜிடி வெறும் 3.3 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். இருப்பினும், நிலையான இ-ட்ரான் ஜிடி 469 பிஎச்பி பவரையும், 630 என்எம் டார்க்கையும் பெறுகிறது.

ALSO READ:கார் வாங்கணுமா? அசத்தலான மைலேஜுடன் பட்ஜெட்டுக்குள் வரும் 5 டாப் கார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More