Home> Technology
Advertisement

மீண்டும் 90 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

மீண்டும் 90 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

தமிழகம், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. 

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வறட்சி காரணமாக குறைந்துகொண்டே வந்தநிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிரித்ததால் அங்கிருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. 

இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது வினாடிக்கு 48,221 கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே தற்போது அணையின் நீர்மட்டம் 90.70 அடியை இன்று காலை எட்டியுள்ளது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி பாசனத்திற்காக அணை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

Read More