Home> Technology
Advertisement

இனி வாட்ஸ் அப்பிலேயே மெட்ரோ டிக்கெட் எடுத்து கொள்ளலாம்!

Metro Tickets on Whatsapp: வாட்ஸ் அப்பில் இப்போது நீங்கள் மெட்ரோ டிக்கெட்டுகளை வாங்க அல்லது ரீசார்ஜ் செய்யக்கூடிய வசதியினை பெற்று பயனடையலாம்.    

இனி வாட்ஸ் அப்பிலேயே மெட்ரோ டிக்கெட் எடுத்து கொள்ளலாம்!

பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி உங்களுக்கு பல வசதிகளை வழங்கி வருகிறது.  வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வது மட்டுமின்றி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஃபைல்களை பகிர்ந்துகொள்வது, ஆடியோ கால் அல்லது வீடியோ கால் செய்வது முதல் பணம் அனுப்பிக்கொள்வது வரை இப்போது பல வசதிகள் கிடைத்துவிட்டது.  இதுதவிர வாட்ஸ் அப்பில் இப்போது நீங்கள் மெட்ரோ டிக்கெட்டுகளை வாங்க அல்லது ரீசார்ஜ் செய்யக்கூடிய வசதியினை பெற்று பயனடையலாம்.  மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது பல்வேறு இந்திய நகரங்களின் மெட்ரோ ரயில் சேவை வழங்குநர்களுடன் கைகோர்த்துள்ளது.  இனிமேல் பயனர்கள் வீட்டிலிருந்தபடியே வாட்ஸ்அப் சாட்போட் மூலம் மெட்ரோ வழங்கும் பல சேவைகளையும் பெற முடியும்.

மேலும் படிக்க | Chat GPT: சாட்ஜிபிடி ஓபன் ஏஐ போட்ட மாஸ் பிளான்! கூகுளுக்கு சவால்

fallbacks

பெங்களூர், மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள மெட்ரோ பயணிகளுக்கு வாட்ஸ்அப் சாட்போட் வசதிகள் கிடைக்க பெறுகிறது. இந்த சேவையைப் பயன்படுத்தி, மக்கள் தங்கள் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.  இந்த சேவைகளை பயன்படுத்தி பயணிகள் டிக்கெட்டுகளை புக் செய்வது, வாங்குவது, ரத்து செய்வது அல்லது டாப்-அப் செய்வது, ரயில் நேர அட்டவணை, வழித்தட வரைபடம், கட்டணம் போன்ற பல முக்கியமான தகவல்களைப் பெறலாம்.  இந்த டிஜிட்டல் வசதியின் மூலம் இந்தியாவில் போக்குவரத்துக்கு பாதுகாப்பானதாகவும், புத்திசாலித்தனமாகவும், வசதியாகவும் மாற்றம் அடைகிறது என்று வாட்ஸ் அப் இந்தியாவின் வணிக நிர்வாக இயக்குனர் ரவி கார்க் தெரிவித்துள்ளனர்.  மேலும் கூறுகையில் பல நகரங்களில் இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த மெட்ரோ சேவைகள் இப்போது வாட்ஸ்அப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.  மேலும் மெட்ரோ பயணிகளின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்க வாட்ஸ் அப் உதவும் என்று ரவி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் புனேவில் உள்ள பயனர்கள் உள்ளூர் மொழியிலோ ஆங்கிலத்திலோ போட் உடன் சாட் செய்யலாம்.  எடுத்துக்காட்டாக, பெங்களூரில் சாட்போட்டைச் செயல்படுத்த, பயனர்கள் https://wa.me/+918105556677 என்ற இணைப்பைக் கிளிக் செய்து 'Hi' என டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.  போட் செயல்படுத்தப்பட்டதும், இ-டிக்கெட்டை முன்பதிவு செய்ய அதிலிருந்து ஒரு URL ஐப் பெறலாம்.  மும்பையில் இ-டிக்கெட்டுகள்  ஆட்டோமேட்டிக் ஃபேர் கலெக்ஷன் (ஏஎஃப்சி) மூலம் சரிபார்க்கப்படும்.

மேலும் படிக்க | iPhone 14 Plus இல் பம்பர் சலுகை, பல ஆயிரம் ரூபாய் தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More