Home> Technology
Advertisement

டிசம்பரில் புயலை கிளப்ப வரும் புதிய ஸ்மார்ட்போன்கள்... OnePlus முதல் Redmi வரை!

New Smartphones: வரும் டிசம்பரில் ஸ்மார்ட்போன் சந்தையில் கால்பதிக்க உள்ள முன்னணி நிறுவனங்களின் மொபைல்களையும், அதன் சிறப்பம்சங்களையும் இங்கு காணலாம்.

டிசம்பரில் புயலை கிளப்ப வரும் புதிய ஸ்மார்ட்போன்கள்... OnePlus முதல் Redmi வரை!

New Smartphones In December 2023: டிசம்பர் மாதம் இன்னும் சில நாள்களில் பிறக்க உள்ளது. டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ், புத்தாண்டு பண்டிகைக்கான தயாரிப்புகளும், தல்ளுபடிகளும் தொடங்கிவிடும். பலரும் டிசம்பர் மாதத்திலேயே தன்னிடம் உள்ள பழைய பொருள்களை, சாதனங்களை கொடுத்துவிட்டு புதிய சாதனங்களை வாங்குவார்கள். 

குறிப்பாக, தங்களிடம் உள்ள ஸ்மார்ட்போன்கள், கணினி, லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை மாற்றுவார்கள். அந்த வகையில், பலரும் சந்தையில் குதிக்கும் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிடுவார்கள். இந்நிலையில், 2023ஆம் ஆண்டு டிசம்பரில் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் கால்பதிக்க உள்ள முன்னணி நிறுவனங்களின் மொபைல்களையும், அதன் சிறப்பம்சங்களையும் இங்கு காணலாம்.

Oppo Reno 11 Series

ரெனோ 10 மொபைலுக்கு அடுத்து Oppo சீனாவில் ரெனோ 11 சீரிஸை அறிமுகப்படுத்துகிறது. உலகளாவிய வெளியீடு வரும் டிசம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது. Oppo Reno 11 மொபைல் Dimensity 8200 சிப்செட், 6.7 இன்ச் 1080p OLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rate), 10-பிட் வண்ணங்கள் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், 4,800mAh பேட்டரி மற்றும் 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | Amazon Mobile Exchange Rules: அமேசானில் பழைய போனுக்கு புதிய போன் பெறுவது எப்படி? எக்ஸ்சேஞ்ச் ரூல்ஸ்

OnePlus 12 Series

செப்டம்பரில் வெளியாகும் என கூறப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், சீனாவில் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த OnePlus 12 மொபைலில் Snapdragon 8 Gen 3 சிப்செட் இருக்கும் என கூறப்படுகிறது. சீனாவின் BOE-ஆல் தயாரிக்கப்பட்ட 6.7-இன்ச் 2K தெளிவுத்திறன் கொண்ட OLED டிஸ்ப்ளே இதில் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் மிகப் பெரிய 5,400mAh பேட்டரி அதன் செயல்பாட்டை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus நிறுவனத்தின் வேகமான 100W வயர்டு சார்ஜிங் பேட்டரியை நிரப்பும்போது காத்திருக்கும் நேரத்தை குறைக்கும். 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கும் இதில் வரும்.

Honor 100

சீனாவில் ஏற்கெனவே இந்த ஸ்மா்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.  Qualcomm Snapdragon 7 Gen 3 சிப்செட் இதில் இருக்கும். நீங்கள் 6.7 இன்ச் 1220p ரெஸ்சோல்யூஷன் கொண்ட OLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rate) ஆகியவற்றைப் பெறுவீர்கள். 

Redmi Note 13 Pro Plus

இந்த Redmi மொபைல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது, இது 2023ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடுத்தர அளவிலான பட்ஜெட் கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மொபைலில் 200MP பிரதான கேமரா, வளைந்த விளிம்புகளுடன் கூடிய 6.67-இன்ச் 1280p OLED டிஸ்ப்ளே, 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி மற்றும் பிரீமியம் வடிவமைப்பு போன்றவை இருக்கலாம் என கூறப்படுகிறது. 

IQOO 12

கடந்த மாதம் சீனாவில் புயலை கிளப்பிய iQOO 12 சீரிஸ் டிசம்பர் 12ஆம் தேதி உலகளாவிய வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. iQOO 12 மொபைலில் 6.7-இன்ச் 1260p OLED பிளாட் டிஸ்ப்ளேவை 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) உடன் வரலாம். iQOO 12 Pro போல் இல்லாமல், இது அதிக ரெஸ்சோல்யூஷன் கொண்ட வளைந்த விளிம்பு டிஸ்ப்ளேவை பெறுகிறது. பேட்டரி திறன் 5000mAh ஆக இருக்கலாம் மற்றும் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் 25 நிமிடங்களுக்குள் முழுமையான சார்ஜை அளிக்கும்.

மேலும் படிக்க | பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ்ச் ரூல்ஸ் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More