Home> Technology
Advertisement

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் குறித்து சில முக்கிய விவரங்கள்!

2020-ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா பெயரிட்டுள்ளது.

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் குறித்து சில முக்கிய விவரங்கள்!

2020-ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா பெயரிட்டுள்ளது.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமிப்பந்து கடந்து செல்லும்போது ஏற்படும் ஒரு நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். 

2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: பல தவறான கருத்துக்கள் உள்ளன -அறிவோம்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10-ம் தேதி இன்று நிகழ இருக்கிறது. இந்த சந்திர கிரகணத்திற்கு நாசா ‘ஓநாய் சந்திர கிரகணம்’ (Wolf Moon Eclipse) என்ற பெயரைச் சூட்டியுள்ளது. இந்த ஆண்டு நிகழவிருக்கும் 4 சந்திர கிரகணங்களில் இது முதலாவது ஆகும். மேக மூட்டம் இல்லை என்றால் நாம் வெறும் கண்ணால் இந்த கிரகண நிகழ்வை பார்த்து ரசிக்க முடியும்.

கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது, 90 சதவீத சந்திரன் பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் சந்திரனின் ஒளி மங்கும், பிற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.42 மணி வரை கிரகணம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணத்தை காண புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Read More