Home> Technology
Advertisement

குறைந்த விலையில் 5ஜி ஃபோன்... களமிறங்கும் லாவா


குறைந்த விலையிலான 5ஜி ஃபோன் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

  குறைந்த விலையில் 5ஜி ஃபோன்... களமிறங்கும் லாவா

5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டதை அடுத்து பலரும் 5ஜி ஃபோன்கள் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால் பட்ஜெட் இடிக்குமா என பலரும் யோசிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கென லாவா நிறுவனம் குறைந்த விலையிலான 5ஜி ஃபோனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது விரைவில் விற்பனைக்கும் வரவிருக்கின்றனர். இதுதொடர்பாக பேசிய, லாவா இன்டர்நேஷனல் லிமிட்டெட்டின் பிரசிடென்ட் மற்றும் பிசினஸ் ஹெட்டான சுனில் ரெய்னா இது தொடர்பாக கூறுகையில், "நாட்டில் தயாரிக்கப்படுவதில் விலை மலிவான 5G ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எப்போதுமே எங்கள் விருப்பமாக உள்ளது. அடுத்த தலைமுறை 5G தொழில்நுட்பத்தை இந்தியர்களுக்கு மலிவு விலையில் வழங்க வேண்டும் என்ற பெரிய பார்வையுடன் எங்களது இந்த தயாரிப்பு தொடர்புடையது" எங்களது Lava Blaze 5G மொபைலானது தொழில்நுட்ப உலகில் இந்தியா வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்று கனவில் உள்ள ஒவ்வொரு இந்திய ஸ்மார்ட் ஃபோன் யூஸருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைலின் அறிமுகம் மூலம் 5G தொழில்நுட்பத்தின் சக்தியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுகிறோம்" என்றார்.

இந்த Blaze 5G மொபைலின் விலை ரூ.10,000க்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. IMC-2022 நிகழ்வில் இது காட்சிப்படுத்தப்பட்டது. Lava Blaze 5G மொபைலானது MediaTek Dimensity 700 SoC ப்ராசஸரை கொண்டுள்ளது மற்றும் 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த மொபைல் 3GB விர்ச்சுவல் ரேம் ஆப்ஷனையும் பெறுகிறது. மேலும் இது 128GB இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. Blaze 5G மொபைல் ஆண்ட்ராய்டு 12ல் இயங்குகிறது. 

 

இது 8MP முன்பக்க கேமராவையும்  5,000mAh பேட்டரியையும் கொண்டிருக்கிறது. Widevine L1 சப்போர்ட்டுடன் 90 Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் 6.5 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைல் சைட் மவுண்ட்டட் அலட்ரா-ஃபாஸ்ட் ஃபிங்கர்பிரின்ட் அன்லாக் கொண்ட லேட்டஸ்ட் பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. Blaze 5G-ன் மற்ற சிறப்பம்சங்களில் USB-C போர்ட், ப்ளூடூத் 5.1, 2 சிம் கார்டுகளுக்கான ஸ்லாட் மற்றும் டூயல் VoLTE ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | 'ஜாக்கிரதை' கூகுள் க்ரோம் குறித்து அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More