Home> Technology
Advertisement

Jio Recharge Plan: இரண்டு மாத வேலிடிட்டியில் புதிய பிளானை கொண்டுவந்திருக்கும் ஜியோ

பட்ஜெட்டை பாதிக்காத ஜியோவின் புதிய ப்ரீப்பெய்ட் பிளான் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்  

Jio Recharge Plan: இரண்டு மாத வேலிடிட்டியில் புதிய பிளானை கொண்டுவந்திருக்கும் ஜியோ

Jio 56 Days Validity Plan: நீங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களில் நல்ல பிளான் எது என்பதை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பட்ஜெட்டை பாதிக்காத பிளானை இங்கே தெரிந்து கொள்வோம்.

Jio Plans: ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்கள் அதிகளவு ரீச்சார்ஜ் செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், குறைவான பிளானில் நிறைய வசதிகளை அந்த திட்டம் வழங்குவது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. ஜியோவில் இருக்கும் நீண்ட வேலிடிட்டி மற்றும் சூப்பரான அம்சங்களை கொண்ட பிளானை நீங்கள் விரும்பினால், இரண்டு மாதங்களுக்கு உங்கள் பட்ஜெட்டை பாதிக்காத ஒரு பிளானை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.  

ஜியோ ப்ரீப்பெய்ட் பிளான்

இரண்டு மாதங்களுக்கு உங்கள் பட்ஜெட்டை பாதிக்காத பிளானின் விலை ரூ.533. இந்த பிளான் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. நீங்கள் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், இரண்டு மாதங்களுக்கு மீண்டும் ரீசார்ஜ் செய்வது பற்றி யோசிக்க வேண்டியதில்லை. இது மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சிறப்பம்சங்களையும் இந்த திட்டம் கொண்டிருக்கிறது. 

திட்டத்தின் ஸ்பெஷல் என்ன?

ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் நிறைய வசதிகளைப் பெறுகிறார்கள். முதலாவதாக, 56 நாட்கள் வேலிடிட்டி. அதே போல் 112 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அழைப்புகள் உள்ளன. இது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 100 s.m.s அனுப்பிக் கொள்ளலாம். கூடுதலாக, ஜியோ டிவி ஆப், ஜியோ சினிமா மற்றும் ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் சந்தா உள்ளிட்ட பல நன்மைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 

மேலும் படிக்க | பாக்கெட்டில் வைத்து கொள்ளும் ஜெனரேட்டர்! மின்சாரம் தயாரிப்பது எளிதாகிவிட்டது

மேலும் படிக்க | வெறும் 15 ஆயிரத்தில் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பைக் வாங்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Read More