Home> Technology
Advertisement

2023 ஸ்பெஷல் ரீசார்ஜ்..தினமும் 2.5ஜிபி, இப்படி ஒரு ஆஃபரா

Reliance Jio Happy New Year 2023: ஜியோ நிறுவனம் இந்த ஆண்டுக்கான புத்தாண்டு பிளான் விவரங்களை அறிவித்துள்ளது. இதில் எவ்வளவு டேட்டா, இன்னும் பிற சலுகைகள் குறித்த விவரங்களைக் காணலாம்.

2023 ஸ்பெஷல் ரீசார்ஜ்..தினமும் 2.5ஜிபி, இப்படி ஒரு ஆஃபரா

ஜியோ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, அந்த வகையில், 2022 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு பிளான் விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி ஜியோ நிறுவனம் ரூபாய் 2023 விலையில் ஹேப்பி நியூ இயர் 2023 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த புதிய ஜியோ நியூ இயர் திட்டத்தின் மூலம் அன்லிமிடேட் வாய்ஸ் கால் மற்றும் பிர நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இப்போது நாம் ஹேப்பி நியூ இயர் 2023 திட்டத்தின முழு விவரத்தை இங்கே காண்போம்.
ஜியோ இன் இந்த ரூ 2023 திட்டத்தை நீங்கள் Jio.com இல் பெற முடியும். மேலும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் MyJio செயலி அல்லது Google Pay மற்றும் PhonePe, paytm, உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

fallbacks

 

மேலும் படிக்க | Cheapest Smartphone: வெறும் ரூ.6,499-க்கு கிடைக்கும் அட்டகாசமான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்

ரூபாய் 2023 ரீசார்ஜ் திட்டமானது, 252 நாட்கள் வேலிடிட்டியுடன், 9 மாதங்களுக்கு அன்லிமிடேட் வாய்ஸ்கால் வசதியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவையும் பெறுவீர்கள். ஏறக்குறைய மொத்தம் 630 ஜிபி டேட்டாவை நீங்கள் பெறுவீர்கள். ரூ.2023 திட்டமானது ஜியோ ஆப்ஸிற்கான இலவச சந்தாவையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. அத்துடன் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் புதிய சந்தாதாரர்களுக்கு ஜியோ இலவச பிரைம் மெம்பர்ஷிப்பையும் வழங்குகிறது.

fallbacks

இதற்கிடையில் இந்த புதிய ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர் எப்போது முடிவடையும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் புத்தாண்டு சலுகை என்பதால் சில வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது! புத்தாண்டில் புதிய திருப்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More