Home> Technology
Advertisement

ஜியோவின் அசத்தும் Buy One Get One சலுகை: இதை பெறுவது அப்படி?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. ரிலையன்ஸ் ஜியோ பல மலிவான திட்டங்களைக் கொண்டுள்ளது.

ஜியோவின் அசத்தும் Buy One Get One சலுகை: இதை பெறுவது அப்படி?

Reliance Jio: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. ரிலையன்ஸ் ஜியோ பல மலிவான திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த முறை ஜியோ ஒரு சிறப்பு சலுகையுடன் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த சலுகையில் (Reliance Offer) வரும் ரூ .200-க்கும் குறைவான திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இதில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ஜியோவின் இந்த திட்டம் 185 ரூபாய்க்கானது. இந்த ரீசார்ஜ்ஜை ஜியோ போன் நபர்களால் மட்டுமே செய்ய முடியும். இந்த திட்டத்தில் இப்போது ’buy one get one' இலவச சலுகை கிடைக்கிறது. அதாவது, நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ .185 ரீசார்ஜ் செய்தால், இரண்டாவது மாதம் அதை இலவசமாகப் பெறலாம். இந்த திட்டத்தின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

ஜியோவின் ரூ 185 திட்டம்

ஜியோவின் (Jio) ரூ 185 திட்டத்தில் இப்போது ’buy one get one' இலவச சலுகை கிடைக்கிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஆனால், இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 56 நாட்களுக்கான செல்லுபடி கிடைக்கும்.

ALSO READ: அதிக பலன்கள் தரும் Airtel, Jio மற்றும் BSNL ஃபைபர் திட்டம்

இதில் தினமும் 2 ஜிபி தரவு வழங்கப்பகிறது. அதாவது, இந்த திட்டத்தில் மொத்தனாக உங்களுக்கு 112 ஜிபி தரவு கிடைக்கும். இந்த திட்டத்தில், நீங்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம். மேலும், நீங்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் பெறுவீர்கள். இந்த திட்டத்துடன், ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் உங்களுக்கு வழங்கப்படும்.

ஜியோவின் ரூ .155 திட்டத்தில் தினமும் 1 ஜிபி தரவு கிடைக்கும்

ஜியோவின் ரூ 155 திட்டத்திலும் பை ஒன் கெட் ஒன் சலுகை உள்ளது. அதாவது, 56 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி தரவு (Data) கிடைக்கும். அதாவது, இந்த திட்டத்தில் உங்களுக்கு 56 ஜிபி தரவு கிடைக்கும்.

இந்த திட்டத்தில், நீங்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம். மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவீர்கள். இந்த திட்டத்துடன், ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் உங்களுக்கு வழங்கப்படும்.

ALSO READ: எந்த பிளான் சிறந்தது; Airtel, Jio, Vi யின் 500 ரூபாய்க்குள் வரும் பிளான்ஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More