Home> Technology
Advertisement

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் இலவசம் தான்! ஆனால் இவங்களுக்கு இல்லை - ஜியோவின் தில்லாலங்கடி

அமேசான், நெட்பிளிக்ஸ் ஓடிடி சந்தாவை இலவசமாக கொடுக்கும் ஜியோ, அது போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் பிளானை அறிவித்துள்ளது. 

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் இலவசம் தான்! ஆனால் இவங்களுக்கு இல்லை - ஜியோவின் தில்லாலங்கடி

டெலிகாம் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஜியோ, இலவச அழைப்பு, டேட்டா என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சந்தாக்களையும் இலவசமாக கொடுத்து வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது. ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜில் பெரும்பாலும் ஹாட்ஸ்டார் ஒன்றை மட்டும் இலவசமாக கொடுக்கும் ஜியோ, போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் கொடுத்து கவர்ந்து வருகிறது. இது ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருக்கிறது.

மேலும் படிக்க | டிரெயின் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலனா இலவச விமான டிக்கெட்: கலக்கும் Trainman App

ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டம்

அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கொடுக்கும் ஜியோவின் போஸ்ட்பெய்ட் பிளானின் விலை ரூ. 399. இந்தத் திட்டத்தில், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து நன்மைகளையும் நீங்கள் பெறுவீர்கள். முதலாவதாக, இந்தத் திட்டத்தில், அகில இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டெட் அழைப்பின் பலன் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர பயனர்களுக்கு 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இணையத்தை பயன்படுத்தாதபோது, 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர் அம்சமும் கூடுதலாக வழங்கப்படுகிறது. 

OTT பலன் என்னென்ன?

இந்தத் திட்டத்தில் இன்னும் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு ஜியோ, Netflix மற்றும் Amazon Prime சந்தாக்களை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் பலன்களைப் பெற விரும்பினால், நீங்கள் போஸ்ட்பெய்டு இணைப்பிற்கு மாறலாம். இது உங்களுக்குப் பெரிதும் பயன்படும். இந்த திட்டம் உங்கள் பாக்கெட்டில் சுமையை ஏற்படுத்தாது. உலகம் முழுவதும் ரிலீஸாகும் பிரபலமான திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை நீங்கள் இலவசமாக கண்டு ரசிக்க முடியும். 

மேலும் படிக்க | இதெல்லாம் ஒரு போனா? என நினைச்சிறாதீங்க மக்கா! ரியல் மீ-ன் டாப் டக்கர் மொபைல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More