Home> Technology
Advertisement

ஜியோ ரூ 296 vs ஏர்டெல் ரூ 296 திட்டம்: இரண்டில் எது பெஸ்ட்?

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளும் ரூ.296 என்கிற ஒரே விலையில் மாதாந்திர ப்ரீபெய்டு திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.  

ஜியோ ரூ 296 vs ஏர்டெல் ரூ 296 திட்டம்: இரண்டில் எது பெஸ்ட்?

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் ஃபைபர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.  சிறந்த மதிப்பை வழங்குவதற்கும், அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் இரண்டு நிறுவனங்களும் பல்வேறு வகையான சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் அதே வேளையில், மற்றொரு முன்னணி நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.  இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரே விலையில் பல திட்டங்களை வழங்குகிறது.  ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளும் ரூ.296 என்கிற ஒரே விலையில் மாதாந்திர ப்ரீபெய்டு திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.  30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் இந்த திட்டமானது அழைப்பு, டேட்டா போன்ற பலவிதமான கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. 

fallbacks

மேலும் படிக்க | Top 5 ChatGPT: 2023 ஆம் ஆண்டில் முதல் 5 சிறந்த ChatGPT குரோம் எக்ஸ்டன்ஸ்

ஜியோ ரூ 296 திட்டம்: ஜியோ ஃப்ரீடம் திட்டங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  மேலும் இதில் வாடிக்கையாளர்களுக்கு 25 ஜிபி டேட்டா மொத்தமாக வழங்கப்படுகிறது.  இதுதவிர கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகியவற்றிற்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.  இந்த ரூ.296 திட்டம் 5ஜி சலுகையின் கீழ் வருகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாராளமாக 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.

ஏர்டெல் ரூ.296 திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் வழங்கும் இந்த திட்டமானது அன்லிமிடெட் அழைப்புகள், 2 மொத்தமாக 25 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  இதுதவிர இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அப்பல்லோ 24|7 சர்க்கிள், பாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்றவற்றிற்கான இலவச சந்தாவை  வழங்குகிறது.

அன்லிமிடெட் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் இணைய சேவை போன்றவற்றை பார்க்கும்போது, ​​ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றது.  அடுத்தபடியாக இரண்டு திட்டங்களும் ஒரேவிதமான டேட்டா நன்மைகளையும், 30 நாட்கள் வேலிடிட்டியையும் வழங்குகிறது. மேலும் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஓடிடி சேவைகளுக்கான இலவச அணுகலை வழங்கும்போது, ​​ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | கோகோ கோலா ஸ்மார்ட்போன்: ரியல்மீ வெளியிட்ட டீசர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More