Home> Technology
Advertisement

iPhone 14: பிளிப்கார்ட்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி!

Flipkart Offer: குறைந்த செலவில் நல்ல ஐபோன் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அப்படியென்றால், இந்த பதிவி உங்களுக்கு ஏற்ற பதிவாக இருக்கும். 

iPhone 14: பிளிப்கார்ட்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி!

ஐபோன் ரசிகரா நீங்கள்? குறைந்த செலவில் நல்ல ஐபோன் வாங்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அப்படியென்றால், இந்த பதிவி உங்களுக்கு ஏற்ற பதிவாக இருக்கும். ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் 14 இல் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீங்கள் ஐபோன் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இதுதான் அதற்கு சரியான நேரமாக இருக்கும். 

தற்போது இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் பெரும் தள்ளுபடியுடன் விற்கப்படுகிறது. ரூ.79,900 விலை கொண்ட ஐபோன் 14-ஐ பிளிப்கார்ட்டில் ரூ.10,000 தள்ளுபடியுடன் வாங்கலாம். கடந்த ஆண்டு, நிறுவனம் மினிக்கு பதிலாக பிளஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. எனினும், இந்த போன அதிக செயல்திறன் வாய்ந்த ஒரு நல்ல போனாகும். இந்த அசத்தலான போனை மிக மலிவான விலையில் வாங்க நல்ல வாய்ப்பு உள்ளது. 

iPhone 14: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

ஐபோன் 14 இன் அறிமுக விலை ரூ.79,900 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இந்த போன் ரூ.66,900க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தொலைபேசியில் ரூ.13,000 பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இந்த தொலைபேசியில் வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் உள்ளன. இதன் காரணமாக விலை மேலும் குறைக்கப்படலாம். 

மேலும் படிக்க | ஜியோவின் 4ஜி மொபைல் இலவசம்...! 2 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை

இந்த போனை வாங்கும்போது ஆக்சிஸ் வங்கி கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5% தள்ளுபடி பெறலாம். இது தவிர ரூ.21,400 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அதாவது பரிமாற்ற சலுகையும் இதில் உள்ளது.

iPhone 14 Plus: சலுகைகள்

ஐபோன் 14 பிளஸ் விலை ரூ.89,900 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இந்த ஐபோன் மாடல் ரூ.75,999க்கு கிடைக்கிறது. வங்கி மற்றும் பரிமாற்றச் சலுகைகளும் தொலைபேசியில் கிடைக்கும். இந்த ஐபோனில் 5% வங்கி சலுகை வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், 21,400 ரூபாய்க்கான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கும். எனினும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போன் நல்ல நிலையிலும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

iPhone 14: விவரக்குறிப்புகள்

ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவில் 1200 நிட்ஸ் ப்ரைட் ப்ரைட்னஸ் கிடைக்கிறது. போனில் 60hz புதுப்பிப்பு வீதம், ரிஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. தொலைபேசி A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஃபோன் சமீபத்திய iOS 16 பதிப்பில் இயங்குகிறது.

மேலும் படிக்க | அன்லிமிடெட் டேட்டா.. அன்லிமிடெட் அழைப்பு.. வெறும் 398 ரூ.பாய் -BSNL சூப்பர் ப்ளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More