Home> Technology
Advertisement

Infinix Note 30 5G இந்தியாவில் அறிமுகம் ஆனது: விலை, பிற விவரங்கள் இதோ

Infinix Note 30 5G: கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Infinix Note 30 5G இந்தியாவில் அறிமுகம் ஆனது: விலை, பிற விவரங்கள் இதோ

Infinix Note 30 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது: பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான இன்பினிக்ஸ்( Infinix) இந்தியாவில் ஒரு பட்ஜெட் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சக்திவாய்ந்த அம்சங்களுடன் வருகிறது. கடந்த மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன் தற்போது இறுதியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் பஞ்ச் ஹோல் கட்அவுட், டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் ஜேபிஎல் இன்-பில்ட் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவை உள்ளன. இதன் விலை 15 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Infinix Note 30 5G: இந்தியாவில் இதன் விலை என்ன? 

Infinix Note 30 5G 4GB + 128GB மாடலின் விலை ரூ.14,999 ஆகவும் 8GB + 256GB மாறுபாட்டின் விலை ரூ.15,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் இதற்கு பணம் செலுத்தினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, ஆரஞ்சு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த போனின் விற்பனை ஜூன் 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் தொடங்கும்.

Infinix Note 30 5G: ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்

Infinix Note 30 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம், செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் மற்றும் 240Hz டச் சாம்லிங் ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் MediaTek Dimensity 6080 SoC மூலம் இயக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ஏசி, கூலர், வாஷிங் மெஷின் வாங்க சூப்பர் நேரம்: பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி

Infinix ஃபோன் 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB வரை UFS3.1 சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. 8ஜிபி கூடுதல் விர்ச்சுவல் ரேம் ஆதரவும் இந்த போனில் உள்ளது. இது உங்களுக்கு சிறந்த பல்பணி (மல்டி டாஸ்கிங்) அனுபவத்தை வழங்கும்.

Infinix Note 30 5G: கேமரா மற்றும் பேட்டரி

Infinix ஃபோனில் 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் யூனிட் மற்றும் AI லென்ஸுடன் மூன்று கேமராக்கள் உள்ளன. செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 16எம்பி ஷூட்டர் உள்ளது. இது தெளிவான மற்றும் விரிவான செல்ஃபிகளை எடுக்க உதவும். 5,000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை நீண்ட நேரம் போனை பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது. இதனுடன், 5G, Dual 4G VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் 5.1, GPS/ GLONASS மற்றும் USB Type-C போர்ட் ஆகிய இணைப்பு விருப்பங்களுடன் (கனெண்டிவிடி ஆப்ஷன்ஸ்) இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 

மேலும் படிக்க | Poco F5 5G Review: பட்ஜெட் விலையில் ஒரு சூப்பரான ஸ்மார்ட்போன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More