Home> Technology
Advertisement

whats App -லிருந்து வங்கி கணக்கை நீக்குவது எப்படி?

வாட்ஸ் அப்பில் இருந்து வங்கிக் கணக்கை மாற்றுவது எப்படி? அல்லது வங்கி கணக்கை நீக்குவது எப்படி? என்பதை பார்க்கலாம். 

whats App -லிருந்து வங்கி கணக்கை நீக்குவது எப்படி?

WhatsApp Payments என்பது, நவம்பர் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. UPI அடிப்படையிலான இந்த தளத்தை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) உருவாக்கியது. பரவலாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் யுபிஐ செயலிகளைக் போலவே, வாட்ஸ் அப் பேமெண்டில் இருந்தும் உடனடியாக மற்றவர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப முடியும்

மேலும் படிக்க | போலி பொருட்களை விற்கும் 5 இந்திய நிறுவனங்கள் - அமெரிக்கா அதிரடி

WhatsApp வாடிக்கையாளர்கள் தங்கள் WhatsApp Payments கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளைச் சேர்க்கவும் முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருக்கும்போது, முதன்மை (Primary account) -ஐ மாற்றிக் கொள்ளவும் முடியும். மேலும், தாங்கள் விரும்பாத வங்கிக் கணக்குகளை வாட்ஸ்அப் பயனர்கள் நீக்கிக் கொள்ளலாம். 

வாட்ஸ்அப் பேமெண்ட்டில் முதன்மை வங்கிக் கணக்கை (Primary account) -ஐ எப்படி மாற்றுவது? 

1.Android  மொபைல் வைத்திருப்பவர்கள், உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்

2. More options -கிளிக் செய்து Payments ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்

3. அதில் நீங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்கில், விரும்பும் வங்கிக் கணக்கை தேர்ந்தெடுங்கள் 

4.  அந்த வங்கிக் கணக்கை ‘Make primary account’ -ஆக மாற்றுங்கள்

 

ஐபோன் வாடிக்கையாளர்கள்


1.ஐபோன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப்பில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லுங்கள்

2. அதில் Payments என்பதற்குச் சென்று, தொடர்புடைய வங்கிக் கணக்கில் தேர்ந்தெடுக்கவும்

3. பின்னர், முதன்மை கணக்கை உருவாக்கு (Make primary account) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்

மேலும் படிக்க | அதிகரிக்கும் 'Zero Click' ஹேக்கிங் - தப்பிக்க வழி உண்டா?

வாட்ஸ்அப்பில் வங்கிக் கணக்கை நீக்குவது எப்படி

1. வாட்ஸ்அப்பில் சென்று பேமெண்ட்ஸ் என்பதைக் கிளிக் செய்யவும்
2. நீங்கள் நீக்க விரும்பும் வங்கிக் கணக்கைத் தட்டவும்
3. இப்போது, ​​வங்கிக் கணக்கை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More