Home> Technology
Advertisement

இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை மறைப்பது எப்படி?

இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை மறைப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.   

இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை மறைப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம் தற்போது மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றாக உள்ளது. பலரும் பயன்படுத்தும் இந்த தளத்தில் யூசர்களுக்கு பிரைவசி என்பதும் அவசியமாகிறது. விரும்புபவர்கள் இன்ஸ்டாகிராமின் பிரைவசி அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் நிறைய தனியுரிமைக் கட்டுப்பாடுகளை வழங்கினாலும், யூசர்கள் இன்னும் சில தந்திரங்களுடன் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதில், உங்கள் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் பட்டியலை அனைவரும் பார்ப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதனை நீங்கள் மறைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | IRCTC செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவாகாது - காரணம் இதுதான்

ஃபாலோயர்ஸை மறைப்பது எப்படி?

Instagram-ல் பின்வரும் பட்டியலையும் பின்தொடர்பவர்களையும் மறைக்க சில வழிகள் உள்ளன. உங்களிடம் தனிப்பட்ட கணக்கு இருந்தால், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உங்களால் மறைக்க முடியாது. இதில் தந்திரமான டிப்ஸை உபயோகித்து உங்களை யார் பின் தொடர்கிறார்கள் மற்றும் யாரைப் பின் தொடர்கிறார்கள் என்பதை நீங்கள் மறைக்கலாம். 

fallbacks

அதற்கு முதல் வழி, அவர்களை பிளாக் செய்வதாகும். நீங்கள் பிளாக் செய்த ஒருவர் உங்களின் தனிப்பட்ட பின்தொடர்பாளர்கள் மற்றும் நீங்கள் பின்தொடர்பவர்களை தெரிந்து கொள்ள முடியாது. வேறு கணக்கை பயன்படுத்தி உங்களை பின்தொடர்ந்தால் மட்டுமே இது சாத்தியம். அதனால், நீங்கள் ஒருவரை பிளாக் செய்ய விரும்பும்பட்சத்தில், புரோஃபைலுக்கு செல்லுங்கள். அங்கே வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் மெனுவைத் கிளிக் செய்து பிளாக் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் படிக்க | 500 ரூபாய்க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி - பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க

ஒருவேளை பிளாக் செய்வது அநாவசியமானது என நீங்கள் நினைத்தால், உங்கள்  தொடர்பில் இருந்து அவரை நீக்கிவிடுங்கள். அவ்வாறு நீக்கப்பட்ட ஒருவர், பதிவுகளை பார்க்கவும், பின்தொடரவும் உங்கள் அனுமதியை கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். இன்ஸ்டாகிராம் தளத்தைப் பொறுத்தவரை யூசர்களை கட்டுப்படுத்தும் விருப்பத்தையும் வழங்குகிறது. பிளாக் விருப்பத்தைப் போலவே இந்த விருப்பமும் சுயவிவர மெனுவில் உள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More