Home> Technology
Advertisement

உங்களுக்கு Call Warning குறித்து அரசு எச்சரிக்கை!! Call Warning என்றால் என்ன? அறிக

பயனர்களின் தனிப்பட்ட (Personal ID details) விவரங்களைத் திருடவும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் போலி அழைப்புகளைத் (Fake calls) தவிர்க்குமாறு எச்சரித்து இருக்கிறது. 

உங்களுக்கு Call Warning குறித்து அரசு எச்சரிக்கை!! Call Warning என்றால் என்ன? அறிக

புது டெல்லி: இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சைபர் பாதுகாப்பு இணைந்து ட்விட்டர் கையாளுதல் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் சைபர் டோஸ்ட் (Cyber Dost) என்ற அமைப்பு பயனர்களின் தனிப்பட்ட (Personal ID details) விவரங்களைத் திருடவும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் போலி அழைப்புகளைத் (Fake calls) தவிர்க்குமாறு எச்சரித்து இருக்கிறது. இந்த மோசடி அழைப்புகளைப் பற்றி இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், சில முக்கியமான உதவிக்குறிப்புகள் பயனர்களுக்கும் கிடைக்கும்.

எப்படி கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறதோ, அதேபோல இணைய மோசடிகளும் (Cyber Crime) வேகமாக வளர்ந்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. இந்த மோசடிகள் அனைத்தையும் தவிர்க்க ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் வழிமுறைகளை குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

ALSO READ |  இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த சதி செய்கிறதா சீனா?

இந்த போலி அழைப்புகளின் மொபைல் எண்கள் பொதுவாக +92 இலிருந்து தொடங்குகின்றன.

இந்த அழைப்புகள் சாதாரண குரல் அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப் அழைப்புகள்.

இந்த அழைப்புகளின் நோக்கம் வங்கி கணக்கு எண் டெபிட் கார்டு விவரங்கள் போன்ற ஒருவரின் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களைப் பெறுவதாகும்.

போலி லாட்டரி அல்லது லக்கி டிரா, பரிவு காத்திருக்கிறது போன்ற ஆசை வாரத்தைகளை பேசி குடிமக்கள் தங்கள் தனிப்பட்ட  விவரங்களை கொடுக்க ஈர்க்கப்படுகிறார்கள்.

ALSO READ |  இந்திய இராணுவ படையில் அண்டை நாட்டு ஹேக்கர்கள் கைவரிசை

அதிகாரியிடமிருந்து போலி கையொப்பத்துடன் உங்களுக்கு மெயில் அல்லது வாட்ஸ்அப் மூலம் செய்தியை பகிர்ந்துக்கொள்வார்கள். அந்த செய்தி உண்மை போல உங்களுக்கு தோன்றும். ஆனால் அது போலியான சான்றிதழ்.

அவர்கள் அந்த செய்திகளுடன் QR குறியீடுகளையும் பார்கோடுகளையும் பகிர்ந்து கொள்ளலாம். அத்தகைய QR குறியீட்டை ஒருபோதும் ஸ்கேன் செய்ய வேண்டாம்.

மோசடி கும்பல் அடிக்கடி உங்கள் எண்ணை அழைத்துக்கொண்டே இருப்பார்கள்.

மோசடி செய்பவர்கள் +01 என தொடங்கும் எண்களிலிருந்து அழைப்பதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ |  மகாராஷ்டிராவில் சுமார் 3 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு

எனவே பொதுமக்கள் தங்கள் வங்கிகணக்கு மற்றும் அடையாள அட்டை, போலி அழைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை செய்துள்ளது.

Read More