Home> Technology
Advertisement

இனி கூகுள் பிளே ஆப்ஸ்கள் இந்த தகவல்களை உங்களுக்கு தெளிவாக காட்டும் !

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ்கள் பயனர்களின் எந்தெந்த டேட்டாக்களை சேமித்து வைக்கும் என்பது குறித்த தகவல்களை காண்பிக்கும் என்று கூகுள் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இனி கூகுள் பிளே ஆப்ஸ்கள் இந்த தகவல்களை உங்களுக்கு தெளிவாக காட்டும் !

கூகுள் பிளே ஸ்டோரில் டேட்டா சேஃப்டியை அறிமுகம் செய்தபின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுவிடாமல் பாதுகாக்கும் பொருட்டு சில முக்கிய அம்சங்களை மக்களுக்கு வழங்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், பிளே ஸ்டோரில் காணப்படும் ஆப்ஸ்கள் எப்படிப்பட்ட டேட்டாக்களை சேமிக்கிறது என்பதை பயனர்களுக்கு காண்பிக்கும் வகையில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.  டேட்டாக்கள் பாதுகாப்புப் பிரிவின் மூலம், ஒரு ஆப்(app) ஒருவரின் டேட்டாவை எவ்வாறு சேகரிக்கிறது என்பது போன்ற தகவல்களை ஆப்ஸ் டெவலப்பர்கள் பயனர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க | Flipkart Big Saving Days: போன், டிவி என அனைத்தையும் பம்பர் சலுகையில் அள்ளிட்டு போகலாம்

இதன் மூலம் ஒரு ஆப் ஆனது பயனர்களின் டேட்டாக்களை சேமித்துள்ளதா, எந்த காரணத்திற்காக அது டேட்டாவை சேமித்துள்ளது, கூகுள் பிளேயின் வழிகாட்டு நெறிமுறை கொள்கைகளை இவை பின்பற்றுகிறதா என்பது குறித்த பல முக்கியமான தகவல்களையும் இது பயனர்களுக்கு தெளிவாக காட்டுகிறது.  சேகரிக்கப்பட்ட டேட்டாவானது மூன்றாம் தரப்பினருடன் பகிரப்பட்டு உள்ளதா, இல்லையா என்பது குறித்தும் இது தெரிவிக்கிறது.  மேலும் ஒவ்வொரு பயனர்களின் டேட்டாக்களை பாதுக்காக்க ஆப் டெவலப்பர்கள் என்னென்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளன என்பது குறித்தும் இது பயனர்களுக்கு முழுமையாக காட்டுகிறது.

fallbacks

ஏற்கனவே இதுகுறித்து கூகுள் தரப்பில் சில நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது, அதாவது ஒரு ஆப் அது சேமித்து வைக்கும் டேட்டாக்களை மட்டும் பயனர்களுக்கு காண்பிப்பது போதாது, கூடுதலாக சில தகவல்களையும் இது தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், ஆப்ஸ்கள் என்னென்ன டேட்டாக்களை சேகரிக்கிறது மற்றும் எந்த காரணத்திற்காக இதனை செய்கிறது என்பதை டெவலப்பர்கள் தெளிவாகக் குறிக்க சில வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளது. 
மேலும் ஆப்ஸ் செயல்பட இந்த டேட்டாக்கள் தேவையா அல்லது இந்தத் டேட்டாவை சேமிக்க விருப்பம் உள்ளதா என்று பயனர்களிடம் கேட்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மேலும் படிக்க | ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமா? சாம்சங்கின் அசத்தலான புதிய டிவிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More