Home> Technology
Advertisement

Google News Showcase, தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் அறிமுகம்

கூகுள் செய்தி ஷோகேஸ் தனது கூட்டாளிகளுடன் நெருக்கமாக இணைந்து செய்திகளை முந்தித்தருவதோடு, பல பிராந்திய மொழிகளிலும் தருவதாக தெரிவித்துள்ளது. பயனர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட paywall கட்டுரைகளுக்கு இலவச அணுகலை வழங்குவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

Google News Showcase, தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் அறிமுகம்

கூகுள் செய்தி ஷோகேஸ் தனது கூட்டாளிகளுடன் நெருக்கமாக இணைந்து செய்திகளை முந்தித்தருவதோடு, பல பிராந்திய மொழிகளிலும் தருவதாக தெரிவித்துள்ளது. பயனர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட paywall கட்டுரைகளுக்கு இலவச அணுகலை வழங்குவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 9 வியாழக்கிழமை, கூகுள் நியூஸ் மற்றும் டிஸ்கவர் ஆகியவற்றின் செய்தி ஷோகேஸ் பேனல்களில் ஆங்கிலம், ஹிந்தி தவிர, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு புதிய மொழிகளுக்கான ஆதரவை கூகுள் அறிவித்துள்ளது.

மே மாதத்தில், கூகுள் நியூஸ் ஷோகேஸை (Google News Showcase), ஆன்லைன் நிறுவனங்கள் மற்றும் வாசகர்களுக்கு வழங்கும் திட்டத்தை, இந்தியாவிற்கு விரிவாக்கம் செய்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதன் மூலம் தற்போது கூகுள் நிறுவனம் 50 க்கும் மேற்பட்ட கூட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளது. 70 க்கும் மேற்பட்ட வெளியீடுகள் (publications) உள்ளதாக தேடுபொறி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Also Read | 10 பைசாவில் 1 கி.மீ பயணம்: அசத்தும் Autm 1.0 மின்சார வாகனம்

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டணச் செய்திகளுக்கான இலவச அணுகலை பயனர்களுக்கு வழங்க, பல நியூஸ் ஷோகேஸ் கூட்டாளர்களுடன் நெருக்கமாக செயல்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் பயனர்களுக்கு உள்ளடக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் செய்தி கூட்டாண்மை மற்றும் கூகுள் நியூஸ் ஷோகேஸ் ஆகியவற்றிற்கு $ 1 பில்லியன் முதலீடு செய்யவும் கூகுள் திட்டமிட்டுள்ளது. பயனர்களுக்கு அத்தியாவசியமான புதிய தகவல்களைத் தயாரித்து விநியோகிக்க உதவுவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

"நியூஸ் ஷோகேஸ் பேனல்கள் முக்கியமான செய்திகளைச் சூழல் மற்றும் கூடுதல் கதைகளுக்கான இணைப்புகளைச் சொல்லும் திறனை அளிக்கின்றன. பேனல்கள் அடையாளம் காணக்கூடிய பிராண்டிங்கையும் கொண்டுள்ளது, இதனால் பயனர்கள் நம்பகமான செய்தி நிறுவனங்களை எளிதாகக் கண்டறிந்து அடையாளம் காண முடியும்" என்று பிராட் பெண்டர், விபி தயாரிப்பு மேலாண்மை, செய்தி சமீபத்தில் தெரிவித்தது.

இந்தோ ஆசிய செய்தி சேவை (Indo Asian News Service), ஏபிபி லைவ், இந்தியா டிவி, ஜீ நியூஸ், அமர் உஜலா, டெக்கான் ஹெரால்ட், பஞ்சாப் கேசரி, தி ட்ரிப்யூன், கலிங்கா டிவி போன்ற தேசிய, பிராந்திய மற்றும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் உட்பட 30 செய்தி வெளியீட்டாளர்களுடன் கூகுள் மே மாதம் ஒப்ப்ந்தம் செய்துக் கொண்டதாக அறிவித்தது..

"கூகுள் நியூஸ் அண்ட் டிஸ்கவர் தளங்களில் உயர் தரமான உள்ளடக்கங்களைக் கையாள்வதற்கு செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களை ஆதரிப்பதே இதன் நோக்கம், அதிலும் குறிப்பாக இந்தக் கடினமான கோவிட் -19 காலங்களில் வாசகர்களுக்குத் தேவையான செய்திகளை வழங்குவது அவசியமாகிறது" என்று கூகுள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. 

Read Also | 8 மணி நேரம் தண்ணீரில் இயங்கும் அசத்தல் ஸ்மார்ட்போன் அறிமுகம்; விவரம் இங்கே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More