Home> Technology
Advertisement

இந்த ஆப்களை இனி பயன்படுத்த முடியாது! அதிரடியாக தடை செய்த கூகுள்!

கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களின் ரகசிய டேட்டாக்களை திருடும் சில ஆப்ஸ்களை கூகுள் தடை செய்துள்ளது.  

இந்த ஆப்களை இனி பயன்படுத்த முடியாது! அதிரடியாக தடை செய்த கூகுள்!

ஸ்மார்ட்போனில் பலவிதமான ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகிறோம், நாம் பயன்படுத்தும் அனைத்து வகையான ஆப்ஸ்களும் நன்மையை மட்டும் தான் தருகிறதா என்றால் நிச்சயம் இல்லை.  பல ஆப்ஸ்கள் நம்முடைய ரகசிய டேட்டாக்களை நமக்கு தெரியாமல் திருடிவிடுகிறது, அப்படிப்பட்ட ஆப்ஸ்களை தான் தற்போது கூகுள் தடை செய்துள்ளது.  10 மில்லியனுக்கும் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட முஸ்லீம் ஆப்ஸ்கள், பார்கோட் ஸ்கேனிங் ஆப்ஸ்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள ஸ்பீட் டிராப்களை கண்டறியும் ஆப்ஸ்கள் போன்றவற்றை கூகுள் தடை செய்துள்ளது.  இந்த QR கோட் ஸ்கேனிங் ஆப்பில் டேட்டா ஸ்க்ராப்பிங் கோட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

fallbacks

மேலும் படிக்க | ரூ.20,000-க்கு இவ்ளோ சிறப்பம்சங்களா? அசத்தும் Poco X4 Pro 5G!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்யப்பட்டு இருக்கும் இந்த ஆப்ஸ்கள் பயனர்களின் லொகேஷன், மெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பர், அருகிலுள்ள சாதனங்கள், முக்கியமான பாஸ்வேர்டுகள்  போன்றவற்றை திருடுகிறது என்பது கண்டறியப்பட்டு உள்ளது.  SDK-ன் S. De R.L ஆனது வாட்ஸ்அப் டவுன்லோடுகளை ஸ்கேன் செய்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  செர்ஜ் எகல்மேன் மற்றும் ஜோயல் ரியர்டன் ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தடை செய்யப்பட்டுள்ள ஆப்ஸ்களில் உள்ள கோட்களை ஆப்சென்சஸ் என்பதன் மூலம் கண்டறிந்தனர், இது மொபைலின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை சரிபார்க்கிறது.

fallbacks

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ரியர்டன் கூறுகையில், ஒருவரது மெயில் மற்றும் மொபைல் நம்பர் மூலம் ஜிபிஎஸ் லொகேஷனை துல்லியமாக கண்டறிவது என்பது சற்று பயமாக தான் இருக்கிறது.  நம்பர் அல்லது மெயில் மூலம் சரியான இருப்பிடத்தை கண்டறிந்து பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றவர்களை சிலர் எளிதில் குறிவைக்கும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார்.  மேலும் கூகுளிடம் இதுகுறித்து தெரிவித்தபோது, அது எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த-25ம் தேதி பிளே ஸ்டோரில் இருந்து ஆப்ஸ்களை மட்டும் நீக்கியது. அதனைத்தொடர்ந்து கூகுள் ஒரு அறிக்கையில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து ஆப்ஸ்களும், எங்களது கொள்கைகளுக்கு இணங்க வேண்டும், அப்படி எங்களது கொள்கைகளை மதிக்காமல் எந்த ஆப்ஸ் சட்டதிட்டங்களை மீறுகிறதோ அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.

மேலும் படிக்க | ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More