Home> Technology
Advertisement

பிளிப்கார்ட் பண்டிகை கால சலுகை... ஸ்மார்போன், டிவிக்களுக்கு 80% வரை தள்ளுபடி

Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்காட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள சலுகை விற்பனை செப்டம்பர் 30, 2024 முதல் தொடங்குகிறது. பண்டிகை கால சலுகையாக எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம். 

பிளிப்கார்ட் பண்டிகை கால சலுகை... ஸ்மார்போன், டிவிக்களுக்கு 80% வரை தள்ளுபடி

Flipkart Big Billion Days Sale 2024 : பண்டிகை கால சலுகையாக எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம். பிளிப்காட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள இந்த சலுகை விற்பனை செப்டம்பர் 30, 2024 முதல் தொடங்குகிறது. இந்த மெகா சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், டிவி மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. எனினும், பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கான சலுகை விற்பனை செப்டம்பர் 29, 2024 முதல் தொடங்கும். இந்த விற்பனையில், தள்ளுபடியைத் தவிர கிரெடிட் காரட் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வழங்கும் சலுகைகள் மற்றும் கேஷ்பேக் தள்ளுபடிகளும் கிடைக்கும் வழங்கப்படுகின்றன.

பிளிப்கார்ட் சலுகை விற்பனையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குகையில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு சிறந்த வகையில் தள்ளுபடி பெறலாம். இது தவிர, உடனடி தள்ளுபடி மற்றும் கட்டணமில்லா EMI விருப்பம், கேஷ்பேக் சலுகைகளையும் நீங்கள் பெற முடியும். லேப்டாப் என்னும் மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்போன்கள் , 4கே ஸ்மார்ட் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பிற எலக்ட்ரானிஸ் சாதனங்கள் வ, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை அடங்கும்.

வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஞ் சலுகைகள்

வங்கிச் சலுகைகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் உடனடி கேஷ்பேக் தள்ளுபடியைப் பெறலாம்.

எக்ஸ்சேன்ஞ் சலுகைகள்: பழைய பொருட்களுக்கு ஈடாக புதிய பொருட்களை வாங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய சாதனங்களான ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் நல்ல நிலைமையில் இருந்தால், சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் படிக்க | போன் பேசும் போது... வாய்ஸ் கிளையரா இல்லையா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்

கேஷ்பேக் மற்றும் கூப்பன்கள்: பல்வேறு கேஷ்பேக் சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்களின் அதிக அளவில் பணத்தை சேமிக்கலாம்

வட்டியில்லாத EMI: ஸ்மார்ட் டிவிகள் அல்லது பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் போன்ற பொருட்களுக்கு வட்டியில்லா EMI விருப்பங்களை Flipkart வழங்கும். வாடிக்கையாளர்கள் கூடுதல் வட்டி இல்லாமல் தவணைகளில் பணம் செலுத்த இத வசதி உதவும்.

அமேசான் விற்பனையும் விரைவில் தொடங்கும்

Flipkart உடன், Amazon Great Indian Festival என்னும் சலுகை விற்பனையில் விரைவில் வெளியாக உள்ளது. அமேசான் விற்பனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமேசான் விற்பனை செப்டம்பர் 29 அல்லது 30 ஆம் தேதி தொடங்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | போலீஸ் இருப்பாரு... பார்த்து போங்க ... எச்சரிக்கும் கூகுள் மேப்ஸ்... நண்பேன்டா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More