Home> Technology
Advertisement

செகணட் கார் வாங்கும் முன் கவனத்தில் வைக்க வேண்டிய 6 விஷயங்கள்

செகணட் கார் வாங்கும் முன் கவனத்தில் வைக்க வேண்டிய 6 விஷயங்கள்  

செகணட் கார் வாங்கும் முன் கவனத்தில் வைக்க வேண்டிய 6 விஷயங்கள்

புது கார்கள் காஸ்டிலியாக இருப்பதால், செகணட் கார்களை வாங்குவதை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அத்தியாவசியம் உள்ளிட்ட பொருளாதார விலையேற்றம் இருக்கும்போது, செகண்ட் கார்களுக்கான மார்க்கெட் சீரான நிலையிலேயே இருக்கிறது. புதிய கார்களின் மார்க்கெட்டை ஒப்பிடும்போது செகண்ட் கார்களின் விற்பனை அதிகளவில் இருப்பதாகவே மார்க்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். 

நீங்களும் பொருளாதார விஷயங்களைக் கருத்தில் கொண்டு செகணட் கார்களை வாங்க விரும்பினால், சில அடிப்படை மற்றும் தேவையான விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. குறிப்பாக, லோன் மூலம் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்போது, அத்தியாவசியமான விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.  

மேலும் படிக்க | EV6 Launch of KIA: இந்தியாவுக்கு 100 கார்கள் மட்டுமே விற்பனைக்கு

தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள்

1. வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கார்களுக்கு முழுமையான கடன் தொகை வழங்க தயாராக இருக்கின்றன. ஒருவேளை உங்களிடம் போதுமான நிதி இல்லாமல் இருந்தீர்கள் என்றால், வங்கிகளை முதலில் அணுகுங்கள். அங்கு உங்களுக்கான கடன் தொகை கிடைக்காதபட்சத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கி கார்களை வாங்கிக் கொள்ளலாம்.

2. பயன்படுத்திய கார்கள் வாங்கும்போது காப்பீட்டு செலவுகள் கடன் தொகை சேர்க்கப்படாது. 

3. பழைய காருக்கு செலுத்தும் வட்டித் தொகையை கணக்கிடும்போது, புதிய கார் வாங்கிவிடலாம். ஆனால், உங்கள் கையில் இருக்கும் இருப்புத் தொகையை அடிப்படையாக வைத்து எந்த முடிவாக இருந்தாலும் எடுப்பது சிறந்தது.

fallbacks

4. பயன்படுத்திய காருக்கு கடன் வாங்கும் போது, ​​EMI தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளை கவனமாக படிக்கவும். நீங்கள் முன்கூட்டியே கடன் வாங்கினால், அதாவது கடன் காலம் முடிவதற்குள் கடனைத் திருப்பிச் செலுத்தினால், சில வங்கிகள் டாக்குமென்ட் சார்ஜ் தொகைகளை கூடுதலாக வசூலிக்க வாய்ப்புகள் உள்ளது. இதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

5. மற்ற கடன்களைப் போலவே, பயன்படுத்திய கார் கடனுக்கும் தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும். கடன் படிவம், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றுடன், கடனை அனுமதிக்க வாகன மதிப்பீட்டு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் சம்பளம் பெறும் ஊழியரா அல்லது சொந்த தொழில் செய்பவரா? என்பதற்கான சான்றுகளையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கேட்பார்கள்.

6. வங்கியில் வட்டி குறைவாக இருக்க வாய்ப்புகள் இருக்கும். அதேநேரேத்தில் வங்கிகளில் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது வட்டி விகிதம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கலாம்.

மேலும் படிக்க | இந்தியாவில் ரூ 59.95 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது KIA EV6

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More