Home> Technology
Advertisement

FB Update: இனி FB-யில் ‘3D photos’ பதிவேற்றும் புதிய வசதி...

இனி நுகநூளில் 3D புகைப்படங்களைப் பதிவேற்றும் புதிய வசதி அறிமுகபடுத்தபட்டுள்ளது...! 

FB Update: இனி FB-யில் ‘3D photos’ பதிவேற்றும் புதிய வசதி...

இனி நுகநூளில் 3D புகைப்படங்களைப் பதிவேற்றும் புதிய வசதி அறிமுகபடுத்தபட்டுள்ளது...! 

உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் கடந்த 2004 ஆம் முகநூலை அறிமுகம் செய்தார். உலக மக்களிடையே பெரும் பங்கை வைக்கிறது இந்த முகநூல். இதையடுத்து, முகநூல் பயனர்களுக்கு ஏற்றார் போல் புதிய புதிய வசதிகளை செய்து வருகிறது.  

டூயல் லென்ஸ் கேமராவில் போர்ட்ரேய்ட் ஆக வைத்து எடுத்த புகைப்படத்தைப் பதிவேற்றி, அதனை பல்வேறு அடுக்குகளாகப் பிரித்து 3D புகைப்படத்தை பயனாளரே உருவாக்கலாம். முக நூலில் உள்ள மெனுவைக் குறிக்கும் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து 3D போட்டோவை உருவாக்கும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். புகைப்படத்தில் உள்ள பின்னணி, நபர், தரை உள்ளிட்டவற்றை தனி தனி அடுக்குகளாகப் பிரித்து அவற்றின் கோணங்களையும், அவற்றுக்கு இடையே உள்ள ஆழத்தையும் மாற்றி, முப்பரிமாண முறையில் இயக்கலாம்.

இந்த வசதி இல்லாத எந்த பயனாளரும் 3D புகைப்படத்தை காணும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. VR எனும் வர்ட்சுவல் ரியாலிட்டியிலும் இதை துல்லியமாகக் காண முடியும். கடந்த வியாழனன்று அறிமுகமான முகநூல் 3D புகைப்பட முறை, அடுத்தடுத்த வாரங்களில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என முகநூல் மிருவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Read More