Home> Technology
Advertisement

Flipkart Big saving days விற்பனையின் கடைசி நாள், எதில் எவ்வளவு தள்ளுபடி

Flipkart Big Saving Days விற்பனையின் கடைசி நாள் இன்று. இந்த விற்பனையில், வாடிக்கையாளர்கள் Infinix முதல் Realme வரையிலான ஸ்மார்ட்போன்களில் அற்புதமான சலுகைகள் பெறுவீர்கள்.

Flipkart Big saving days விற்பனையின் கடைசி நாள், எதில் எவ்வளவு தள்ளுபடி

புதுடெல்லி: பிளிப்கார்ட் (Flipkart) பிக் சேவிங் டேஸ் விற்பனையின் (Flipkart Big Saving Days) கடைசி நாள் இன்று. இந்த விற்பனை டிசம்பர் 16 முதல் தொடங்கியது. இந்த விற்பனையில் ஒன்றல்ல இரண்டல்ல அதிக எண்ணிக்கையிலான மொபைல் போன்கள் உள்ளன. இன்று நாம் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களைப் பற்றி காண உள்ளோம். அவை தள்ளுபடியிலிருந்து பரிமாற்றச் சலுகைகள் மற்றும் மலிவு விலையில்லா EMI வரை வழங்கப்படுகின்றன.

Infinix Hot 11s: விலை - ரூ 10,499
Infinix Hot 11s ஸ்மார்ட்போனில் Axis வங்கியில் இருந்து 5 சதவீத கேஷ்பேக் மற்றும் SBI வழங்கும் 1000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, ரூ.9,950 எக்ஸ்சேஞ்ச் சலுகையும், ரூ.364க்கான நோ-காஸ்ட் இஎம்ஐயும் சாதனத்தில் (Flipkart) கிடைக்கும். Infinix Hot 11S ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இதனுடன், 5000 mAh பேட்டரி மற்றும் மீடியா டெக்கின் இடைப்பட்ட செயலி ஆகியவை ஸ்மார்ட்போனில் கிடைக்கும்.

ALSO READ | Samsung போனில் ரூ.35,000 வரை தள்ளுபடி: நம்ப முடியாத சலுகைகள் 

Realme 8i: விலை - ரூ 13,999 
Realme 8i ஸ்மார்ட்போன் ரூ.12,750 எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ.486 விலையில்லா EMI உடன் கிடைக்கிறது. இந்த சாதனத்தில் எஸ்பிஐ 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இது தவிர, ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். Realme 8i 6.6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது தவிர, போனில் 5000 mAh பேட்டரி கிடைக்கும்.

Moto G60: விலை - ரூ 16,499
மோட்டோரோலாவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி60 ஆகும். இந்த சாதனம் 108 மெகாபிக்சல் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 6.78 அங்குல screen கொண்டுள்ளது. இந்த ஃபோன் 6000 mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 732G செயலியைப் பெறும். இது தவிர, 32 ஜிபி செல்ஃபி கேமரா மற்றும் 6 ஜிபி ரேம் ஆகியவை ஸ்மார்ட்போனில் கிடைக்கும். தற்போது சலுகைகளைப் பற்றி பேசுகையில், மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனில் 10 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் ரூ.5,500 சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், இந்த போனை மாதம் ரூ.572 EMI உடன் வாங்கலாம்.

ALSO READ | இந்திய சந்தையை கலக்க வருகிறது MSI-ன் அட்டகாசமான Laptop: அசத்தல் அம்சங்கள்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More