Home> Technology
Advertisement

QR கோடை ஸ்கேன் செய்யவேண்டாம்! வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை!

வாடிக்கையாளர்கள் தேவையில்லாத QR கோடை ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கில் வைத்திருக்கும் பணம் பறிபோய்விடும் என எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.  

QR கோடை ஸ்கேன் செய்யவேண்டாம்! வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை!

நமது நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப டிஜிட்டல் மயமாக்கல் செய்யப்பட்டு வருகிறது, அவை ஒருபுறம் வளர்ந்து வர மற்றொரு புறம் ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் கிரைம் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  அந்த வகையில் தற்போது QR கோட் மூலம் பல மோசடி குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.  இந்த மோசடி சம்பவங்களை கருத்திற்கொண்டு எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களை மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் QR கோட்களை தேவையில்லாமல் ஸ்கேன் செய்யவேண்டாம், அப்படி செய்தால் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணம் பறிபோகும் என்று எச்சரித்துள்ளது.

fallbacks

மேலும் படிக்க | அமேசானையே அலறவிட்ட ஹேக்கர்ஸ்!- நெட்டிசன்ஸ் ஷாக்!

எஸ்பிஐ வங்கி கிட்டத்தட்ட 44 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.  எஸ்பிஐ வங்கி இந்த எச்சரிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.  அந்த ட்வீட்டில், 'QR கோடை ஸ்கேன் செய்து நீங்கள் பணத்தை பெற வேண்டிய அவசியமில்லை, நீங்கள் ஒவ்வொரு முறையும் யுபிஐ பேமெண்ட் செய்யும் போது சில பாதுகாப்பு குறிப்புகளை நினைவில் வைத்துக்கொண்டால் போதும்" என்று கூறியுள்ளது.

QR கோட் எப்போதும் பணத்தை செலுத்துவதற்கு தான் பயன்படுத்தப்படுகிறதே தவிர ஒருபோதும் பணத்தை எடுத்துக்கொள்வதற்கு பயன்படுத்தப்படவில்லை என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.  அப்படி இருக்கையில் நீங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள் என்று மெசேஜ் அல்லது மெயில் வந்தால் அதனை தவறுதலாக கூட ஸ்கேன் செய்துவிட கூடாது.  அவ்வாறு தவறுதலாக நீங்கள் ஸ்கேன் செய்துவிட்டால் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் மோசடி கும்பல் கைப்பற்றி விடும். அந்த QR கோடை நீங்கள் ஸ்கேன் செய்யும் போது உங்களுக்கு பணம் கிடைக்காது அதற்கு பதிலாக உங்கள் வாங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் தான் வரும்.  இந்த மோசடியிலிருந்து நீங்கள் தப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

fallbacks

- வங்கிகள் எப்போதும் அதன் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சில பாதுகாப்பு தகவல்களை வழங்கியுள்ளது.  இதில் நீங்கள் ஏதேனும் தவறு செய்ய நேரிட்டால் பாதிப்பு உங்களுக்குத்தான்.

- பணம் செலுத்தும் முன் யுபிஐ ஐடியை ஒருமுறை சரிபார்க்கவும்.

- யுபிஐ பேமெண்ட் செய்யும்போது சில பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

- பணத்தை அனுப்புவதற்கு மட்டுமே யுபிஐ பின் தேவைப்படும், பணத்தை பெறுவதற்கு அல்ல.

- ஒருவருக்கு பணம் அனுப்பும் முன் மொபைல் நம்பர், பெயர் மற்றும் யுபிஐ ஐடி ஆகியவற்றை எப்போதும் சரிபார்க்கவும்.

- உங்களது யுபிஐ பின்னை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

- ஒருபோதும் யுபிஐ பின்னை தவறுதலாக பயன்படுத்தவேண்டும்.

- ஸ்கேனரை சரியாகப் பயன்படுத்தி பணத்தை ட்ரான்ஸாக்ஷன் செய்யவும்.

- பணம் செலுத்துதல் அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு வங்கியின் அதிகாரபூர்வ செயலியில் உதவியை பெறலாம்.

- ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் வங்கியின் குறை தீர்க்கும் போர்டல் https://crcf.sbi.co.in/ccf/ மூலம் உதவியை பெறலாம்.

மேலும் படிக்க | இனி போன்களில் சிம் கார்டுகள் போட முடியாது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More