Home> Technology
Advertisement

Flipkart வழங்கும் அதிரடி தள்ளுபடி... iPhone 14-ஐ மலிவு விலை வாங்க வாய்ப்பு..!!

ஐபோன் வாங்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில், ஐபோன் 14 (iPhone 14) மாடலை குறைந்த விலையில் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. 

Flipkart வழங்கும் அதிரடி தள்ளுபடி... iPhone 14-ஐ மலிவு விலை வாங்க வாய்ப்பு..!!

இன்றைய நவீன யுகத்தில் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆகி விட்டன. இவை ஆடம்பர பொருளாக இருந்த காலம் போய் விட்டது. இப்போது அத்தியாவசியமான பொருளாக ஆகிவிட்டது. ஸ்மார்ட்போனை பல நிறுவனங்கள், பல வகையான மாடல்களை தயாரிக்கின்றன. ஆனாலும், ஐபோன் வாங்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில், ஐபோன் 14 (iPhone 14) மாடலை குறைந்த விலையில் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. 

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஐபோன் 14 ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தள்ளுபடி பெற வாய்ப்பு உள்ளது. ஐபோனின் விலை ரூ.58,999 என்ற அளவில் உள்ள நிலையில், ஐபோன் 14ஐ ரூ.8 ஆயிரத்திற்கும் குறைவாக வாங்கலாம். ஃப்ளிப்கார்டிலிருந்து iPhone 14 ஐ எப்படி குறைந்த விலையில் வாங்கலாம் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்

தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஞ் ஆஃபர் விபரம்

ஐபோன் 14 ஸ்மார்ட்போனின் (Smartphone) சில்லறை விலை ரூ.69,999 ஆகும், இதற்கு பிளிப்கார்ட்டில் 15 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடிக்கு பிறகு ஐபோன் 14 ரூ.58,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ரூ.50 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கும் அதாவது, பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து மாற்றிக் கொள்வதன் மூலம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். ஆனால் உங்கள் ஸ்மார்ட்போனின் நிலையைப் பொறுத்து எக்ஸ்சேன்ஞ் ஆபரின் மதிப்பு மாறுபடும். 

மேலும் படிக்க | 4G ரிசார்ஜ் பிளான்களில் BSNL தான் பெஸ்ட்! புதிய அன்லிமிடெட் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல்!

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதால் கிடைக்கும் தள்ளுபடி விபரம்

ஐபோனை வாங்க HDFC பேங்க் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது EMI அப்ஷனை தேர்வு செய்திருந்தால் ரூ.4000 தள்ளுபடி பெற முடியும். மேலும், HDFC வங்கி கிரெடிட் பணம் செலுத்தும் போது ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, ஆக்சிஸ் வங்கி கார்டுக்கு 5 சதவீதம் தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்குகிறது.

ஐபோன் 14 ஸ்மார்போனில் உள்ள சிறப்பு அம்சங்கள்

ஐபோன் 14 ஸ்மார்போனின் 128 ஜிபி மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே இருக்கும். மேலும், இதில் 12 மெகாபிக்சல் டூயல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 12எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. போனில் A15 பயோனிக் சிப்செட் உள்ளது. போனை வாங்கும் போது ஒரு வருட வாரண்டியும் கிடைக்கும். மேலும், 6 மாத காலத்திற்கான இன்-பாக்ஸ் ஆக்சஸரீஸ் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | சாம்சங் முதல் நத்திங் வரை... ஜூலை 2வது வாரத்தில் சந்தைக்கு வரும் அசத்தல் போன்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More