Home> Technology
Advertisement

BSNL மலிவான பிரீபெய்ட் திட்டங்கள்... ரூ.100 முதல் ரூ.400 வரையிலான திட்டங்கள் விபரம்

BSNL Recharge plans: மிகக் குறைந்த கட்டணத்தில் அட்டகாசமான பிளான்களை வழங்ககுவதன் மூலம் பிஎஸ்என்எல் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.

BSNL மலிவான பிரீபெய்ட் திட்டங்கள்... ரூ.100 முதல் ரூ.400 வரையிலான திட்டங்கள் விபரம்

ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த மாதம் ரீசார்ஜ் கட்டணங்களை 25% அளவுக்கு உயர்த்திய நிலையில், ஏராளமானோர்  தங்கள் பார்வையை பிஎஸ்என்எல் நோக்கி திரும்பி வருகின்றனர். மிகக் குறைந்த கட்டணத்தில் அட்டகாசமான பிளான்களை வழங்ககுவதன் மூலம் பிஎஸ்என்எல் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.

அரசு பொதுத்துறை நிறுவனமான BSNL மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதில் மிகவும் பிரபலம். BSNL நடுத்தர மக்கள்,, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் அதிக அளவில் வாடிக்கையாளர்களின் தேர்வாக இருக்கும் சில மலிவான திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.118 Plan Details)

பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் ரூ.118  ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு, தினமும் 0.5 ஜிபி அதிவேக டேட்டா,  வரம்பற்ற இலவச அழைப்பு  ஆகிய நன்மைகள் கிடைக்கும். வாய்ஸ் கால் மட்டும் பயன்படுத்துவோருக்கான சிறந்த திட்டம் இது

ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 20 நாட்கள் 
அதிவேக டேட்டா: 0.5 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.147 Plan Details)

பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் ரூ.147 ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு 10 ஜிபி அதிவேக டேட்டா,  வரம்பற்ற இலவச அழைப்பு ஆகிய நன்மைகள் வழங்கப்படும்.

ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 30 நாட்கள் 
அதிவேக டேட்டா: 10 ஜிபி
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்

மேலும் படிக்க | ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் 15,000+ 4G டவர்கள்... அதிரடி காட்டும் BSNL நிறுவனம்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.184 Plan Details)

பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் ரூ.184  ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு, தினமும்1 ஜிபி அதிவேக டேட்டா,  வரம்பற்ற இலவச அழைப்பு  ஆகிய நன்மைகள் கிடைக்கும். 

ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள் 
அதிவேக டேட்டா: 1 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.298 Plan Details)

பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் ரூ.294  ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு, தினமும்1 ஜிபி அதிவேக டேட்டா,  வரம்பற்ற இலவச அழைப்பு  ஆகிய நன்மைகள் கிடைக்கும். 

ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 52 நாட்கள் 
அதிவேக டேட்டா: 1 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்
கூடுதல் பலன்கள்: Eros Now பொழுதுபோக்கு சேவைகளுக்கான இலவச சந்தா

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.399 Plan Details)

பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் ரூ.399  ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு, தினமும்1 ஜிபி அதிவேக டேட்டா,  வரம்பற்ற இலவச அழைப்பு  ஆகிய நன்மைகள் கிடைக்கும். 

ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 70 நாட்கள் 
அதிவேக டேட்டா: 1 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்

மேலும் படிக்க | Innovation: மின்சாரம் தயாரிக்கும் ஷூ! ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்கு வரும் நவீன காலணிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More