Home> Technology
Advertisement

Realme C30: பிளிப்கார்ட் ஆஃபரில் ரூ.549-க்கு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்

ரியல் மீ நிறுவனத்தின் ரியல்மீ சி30 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் ஆஃபர் விற்பனையில் வெறும் 549 ரூபாய்க்கு கிடைக்கிறது.   

Realme C30: பிளிப்கார்ட் ஆஃபரில் ரூ.549-க்கு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ குறைவான விலையில் ஸ்மார்ட்போன் வாங்கும் பிளான் இருந்தால், பிளிப்கார்ட்டில் இருக்கும் சிறந்த ஆஃப்ர்களை தெரிந்து கொள்ளுங்கள். இப்போது இருக்கும் ஆஃபரில் Realme C30 போன்ற சிறந்த ஸ்மார்ட்போனை மிக மிக சொற்ப விலையில் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பிளிப்கார்ட்டில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் டீலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Realme C30 சலுகை

Realme C30 ஸ்மார்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ஆகும். வழக்கமான நாட்களில் இதன் விலை ரூ. 8,499. ஆனால் ஆஃபரில் 20 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ.6,799-க்கு வாங்கலாம். ஆஃபரில் போனை வாங்குவதன் மூலம் சுமார் 1700 ரூபாயை நீங்கள் சேமிக்க முடியும். வங்கிச் சலுகைகளைப் பற்றி பேசுகையில், ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தினால் கூடுதல் சலுகை உண்டு. அந்த கார்டுகளில் கட்டணம் செலுத்தப்பட்டால், ரூ.355 வரை கூடுதலாக சேமிக்கலாம். மறுபுறம், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்துவதன் மூலம் ரூ.355 வரை சேமிக்க முடியும். 

fallbacks

இது தவிர, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 10 சதவீதம் அதாவது அதிகபட்சமாக ரூ.1500 வரை சேமிக்கலாம். Flipkart Axis Bank கார்டு மூலம் பணம் செலுத்தினால் 8 சதவீதம் அதாவது ரூ.1500 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரைக் கருத்தில் கொண்டு, உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.6,250 வரை போனஸாகப் பெறலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் முழுப் பலனும், எக்ஸ்சேஞ்சில் நீங்கள் வழங்கும் போனின் தற்போதைய நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனும் கிடைத்தால், போனின் பயனுள்ள விலை வெறும் ரூ.549 ஆகக் குறையும்.

Realme C30-ன் அம்சங்கள் 

Realme C30 இல் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் முதல் 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி பேக்கப் பற்றி பேசுகையில், 5000mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. Unisoc T612 செயலி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1 டிபி வரை விரிவாக்க முடியும்.

மேலும் படிக்க | XUV 400 எலக்ட்ரிக் காரை வெளியிட்டது மஹிந்திரா: எஸ்யூவியின் சிறப்பம்சங்கள்

மேலும் படிக்க | Automatic Smartphone: ஆண்டிராய்டு போனை ஆட்டோமேட்டிக் ஸ்மார்ட்போனாக மாற்றலாம்! சிம்பிள் டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More