Home> Technology
Advertisement

புதிய iPhone SE 3-ஐ 28,900 ரூபாய்க்கு வாங்க அறிய வாய்ப்பு!

ஆப்பிள் ஐபோன் SE 2022 மொபைலானது இந்திய சந்தையில் ரூ.43,900க்கு அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு தள்ளுபடிகளுடன் ரூ.28,900க்கு கிடைக்கிறது.  

புதிய iPhone SE 3-ஐ 28,900 ரூபாய்க்கு வாங்க அறிய வாய்ப்பு!

பெரும்பாலான மக்கள் ஆப்பிள் ஐபோன்களை பெரிதும் விரும்புகின்றனர், அதற்கேற்ப அந்நிறுவனமும் பல்வேறு புதுமைகள் பொருந்திய மொபைல்களை வெளியிட்டு வருகிறது.  சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ3 மற்றும் ஐபோன் எஸ்இ 2022ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஆப்பிள் ஐபேட் ஏர் மற்றும் ஆப்பிள் மேக் ஸ்டுடியோவுடன் தொடங்கப்பட்டுள்ளது.  இது முன்னர் வெளியான ஆப்பிள் எஸ்இ போன்ற அதே மாடலில், மேம்படுத்தப்பட்ட கேமரா தரத்துடன் வருகிற இந்த மொபைலானது ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயங்குகிறது.  இந்தியாவில் ரூ.43,900க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஐபோன் எஸ்இ3 ஆனது பல்வேறு விதமான தள்ளுபடிகளுடன் வெறும் ரூ.28,900க்கு கிடைக்கிறது.

fallbacks

மேலும் படிக்க | 6000mAH பேட்டரி கொண்ட Samsung போனை ரூ.499-க்கு வாங்குங்கள்

இந்தியாவில் 64ஜிபி வேரியண்ட்டுடன் கிடைக்கும் ஐபோன் எஸ்இ ஆனது ரூ.43,900க்கும், 128ஜிபி வேரியண்ட்டுடம் கிடைக்கும் ஐபோன் எஸ்இ ரூ.48,900க்கும் மற்றும் டாப்-ஸ்பெக் 256ஜிபி வேரியண்ட் கொண்ட மொபைலானது ரூ.58,900க்கும் கிடைக்கிறது.  ஆப்பிளின் அதிகாரபூர்வ வலைத்தளங்கள், சில்லறை விற்பனையாளர்கள், அமேசான், விஜய் சேல்ஸ் மற்றும் ரிலையன்ஸ் போன்ற பல்வேறு ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.  

ஆப்பிள் ரீசெல்லர் இந்தியா ஐஸ்டோர் ஆனது ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், கோடக் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி ஐபோன் எஸ்ய்  ஐ வாங்குபவர்களுக்கு ரூ.2000 வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்குகிறது.  இந்த சலுகை மூலம் மொபைலின் விலை ரூ.41,900 ஆக குறைகிறது.  கேஷிஃபை மற்றும் சர்விஃபை மூலம் பழைய மொபைல்களை மாற்றுபவர்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது.  எக்ஸ்சேஞ் சலுகை மூலம் 64ஜிபி வேரியண்ட் ஐபோன்8 ஐ பெறும்போது ரூ.13,000 வரை சலுகை கிடைத்து, ஐபோன் எஸ்இ 2022ன் விலை ரூ.28,900 ஆக குறைகிறது.

fallbacks

மேலும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ3 ஆனது  4.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 6-கோர் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுவதோடு, 16-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளது.  இந்த எஞ்சின் தான் ஐபோன் 13 சீரிஸையும் இயக்குகிறது.  இதில் 12 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமராவுடன் சென்சார்-ஷிப்ட் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 7 மெகாபிக்சல் ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

மேலும் படிக்க | வெறும் ரூ.821-க்கு அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் சேல் அதிரடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More