Home> Technology
Advertisement

நவம்பர் மாத கார் விற்பனையில் 111% வளர்ச்சி பெற்ற மாருதி டாடா மலிவு விலை கார்கள்

Car Sales in November 2022: மாருதி-டாடாவின் இரண்டு மலிவான கார்கள் விற்பனையில் 111% வளர்ச்சி அடைந்து பிற கார்களை போட்டியில் தோற்கடித்தன. இதற்கு காரணம் விலை வெறும் 6 லட்சம் என்பது மட்டுமா?

நவம்பர் மாத கார் விற்பனையில் 111% வளர்ச்சி பெற்ற மாருதி டாடா மலிவு விலை கார்கள்

மும்பை: அதிகம் விற்பனையாகும் 10 கார்களின் பட்டியலில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதம் மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு வாகனம் அதிகபட்சமாக விற்று தீர்ந்துள்ளன. இந்த இரண்டு மலிவு கார்களின் வளர்ச்சிக்கு முன்னால் மற்ற அனைத்து வாகனங்களும் பின்தங்கிவிட்டன. விற்பனையில் 111% வளர்ச்சி பெற்றுள்ள இந்த இரு கார்களின் விலையும் வெறும் 6 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.  நவம்பர் மாத கார் விற்பனை பட்டியல் வெளியாகி டாடாவையும் மாருதியையும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த மாதம் (2022 நவம்பர்) அதிகம் விற்பனையான முதல் 10 கார்களில், 7 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் மொத்த விற்பனை ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த மாதம், நவம்பர் 2022 இல் மாருதி சுசுகி இந்தியாவின் மொத்த மொத்த விற்பனை 14 சதவீதம் அதிகரித்து 1,59,044 யூனிட்டுகள் என்ற அளவில் ஏற்றம் கண்டுள்ளது. பட்டியலில், ஹூண்டாய் மோட்டார்ஸ் இரண்டாவது இடத்திலும், டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

அதிக விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு வாகனம் அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்தது.

மேலும் படிக்க | கார் வாங்கணுமா? இந்த மாசமே வாங்குங்க!! மாருதியில் டிசம்பர் மாதம் எக்கச்சக்க தள்ளுபடிகள்

மாருதி பலேனோ
மாருதி பலேனோ நவம்பர் 2022 இல் அதிகம் விற்பனையாகும் கார் மட்டுமல்ல, முதல் 10 கார்களின் பட்டியலில் வேகமாக வளர்ந்து வரும் காராகவும் உள்ளது. கடந்த மாதத்தில் 20,945 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு நவம்பரில், 11,014 யூனிட் பலேனோ விற்பனையானது.

அதாவது, பலேனோவின் ஆண்டு வளர்ச்சி 111% ஆக உள்ளது. நிறுவனத்தின் இந்த ஹேட்ச்பேக்கின் விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. 360 டிகிரி கேமரா, ஹெட் அப் டிஸ்ப்ளே மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

டாடா பஞ்ச்
டாடா நெக்ஸான் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் கார் டாடா பஞ்ச் ஆகும். டாப் 10 பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது. இது மாருதி பிரெஸ்ஸாவை விட அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. டாடா பஞ்ச் நவம்பர் மாதத்தில் 12,131 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு நவம்பரில், 6,110 யூனிட்கள் விற்பனையானது. இதன் மூலம், டாடா பன்ச் ஆண்டுக்கு ஆண்டு 98% வளர்ச்சியை எட்டியுள்ளது.

Tata Punch SUV விலை ரூ.6 லட்சத்தில் தொடங்கி ரூ.9.54 லட்சம் வரை செல்கிறது. 7 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஆட்டோ ஏர் கண்டிஷனிங், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | கார் வாங்கும் கனவை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்! ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More