Home> Technology
Advertisement

Car Loan Tips: கார் கடன் வாங்கும் முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

Car Loan: இந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட அனைவரும் தங்களுக்கென சொந்தமாக ஒரு வாகனம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். 

Car Loan Tips: கார் கடன் வாங்கும் முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

கார் கடன், முக்கிய குறிப்புகள்: டிஜிட்டல் மற்றும் டெக்னாலஜி உலகில் நாம் தொடர்ந்து முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில், அனைத்து விதமான கடன்களையும் பெறுவது எவ்வளவு எளிதானதோ, அதே அளவு கடினமானதாகவும் உள்ளது. இந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட அனைவரும் தங்களுக்கென சொந்தமாக ஒரு வாகனம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். மேலும் பெரும்பாலான மக்கள் இதற்காக கடன் வாங்குகிறார்கள். ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவது சில சமயங்களில் கடனை எடுப்பதை விட கடினமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், திட்டமிடல் சரியாக செய்யப்படாவிட்டால், காரின் EMI வாடிக்கையாளருக்கு பெரும் சுமையாக மாறலாம். ஆகையால், கடன் வாங்குவதற்கு முன், வாடிக்கையாளர்கள் கடன் EMI கால்குலேட்டரின் உதவியுடன் பட்ஜெட்டை உருவாக்கி, பின்வரும் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்

கடன் வாங்குவதற்கு முன், வாடிக்கையாளர் காருக்கான முழுமையான பட்ஜெட்டைத் தயாரிக்க வேண்டும். கார் வாங்கும் போது ஏற்படும் இன்சூரன்ஸ், எரிபொருள், பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் போன்ற கூடுதல் செலவுகளை மக்கள் பெரும்பாலும் கணக்கில் எடுப்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிரெடிட் ஸ்கோரை கவனித்துக் கொள்ளுங்கள்

எந்தவொரு கடனுக்கும் மிக முக்கியமான அளவுகோல்களில் ஒன்று ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோர் ஆகும். இது ஒரு நபர் சிறந்த விதிமுறைகளுடன் எளிதாக கடன்களைப் பெற உதவுகிறது. கிரெடிட் கார்டு பாக்கிகள் மற்றும் பிற கடன்கள் போன்றவற்றை சரியான நேரத்தில் செலுத்துதல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தலாம்.

மேலும் படிக்க | தட்டித் தூக்கும் ஹூண்டாய் Ioniq 5 N சூப்பர் கார்! அசத்தலான சிறப்பம்சங்கள்

சரியான காரை தேர்வு செய்யவும்

பெரும்பாலான மக்கள், தங்கள் தேவையை விட வேறு பல காரணங்களால் பாதிக்கப்பட்டு, தங்கள் பட்ஜெட்டை விட அதிகமான விலை கொண்ட ஒரு காரை கடனில் வாங்குகிறார்கள். ஆனால் பின்னர் அதற்கு அதிக EMI செலுத்துவதில் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, கார் வாங்கும் போது பட்ஜெட்டுடன் காரின் தேவையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டவுண்பேமெண்ட் அதிகமாக செய்யவும்

கார் வாங்கும் போது, ​​முடிந்தவரை முன்பணம் செலுத்துங்கள். இது பின்னர் EMI வடிவில் உங்கள் மீதான சுமையை குறைக்கும். மேலும் இதனால் EMI-யை திருப்பி செலுத்துவதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

குறுகிய காலத்திற்கு கடன் வாங்குங்கள்

எந்தவொரு கடனையும் எடுக்கும்போது, ​​முடிந்தவரை அதன் காலவரையறையை குறைந்தபட்சமாக வைத்திருக்க முயற்சிக்கவும். இதன் மூலம், நீங்கள் விரைவாக கடனில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், வட்டியும் மிக குறைவாகவே செலுத்த வேண்டியிருக்கும்.

சரியான நேரத்தில் EMI செலுத்துங்கள்

கடனைப் பெற்ற பிறகு உங்கள் EMI-களுக்கு முன்னுரிமை கொடுத்து சரியான நேரத்தில் அவற்றை செலுத்துங்கள். இது கடன் வாங்குபவரின் கிரெடிட் ஸ்கோரை நன்றாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், அடுத்த தவணைக்கான வட்டியின் கூடுதல் சுமையை நீங்கள் சுமக்க வேண்டிய நிலையும் உங்களுக்கு ஏற்படாது. 

கூடுதல் தகவல்

உங்களிடம் கார் அல்லது பைக் இருந்தால், நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்று உள்ளது. இது அடிக்கடி வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்வதுண்டு. வாகனங்களின் டயர்கள் விரைவாக தேய்ந்து போவதாக மக்கள் பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், வாகனத்தின் டயர்கள் தேய்ந்து கிடப்பதற்குப் பின்னால், அந்த நிறுவனத்தை விட வாகன உரிமையாளரின் அலட்சியமே பெரிய காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி, வாகனத்தின் டயர்கள் தேய்மானம் அடைந்தால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டயர் தேய்மானத்தைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.  

- டயர் அழுத்தத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்
- அவ்வப்போது டயர்களை மாற்றவும்
- டயர் சீலண்டை பயன்படுத்துங்கள்
- சரியான நேரத்தில் கார் டயர்களை மாற்றவும். 

மேலும் படிக்க | இந்தியாவிலேயே தயாராகும் டெஸ்லா மின்சார கார் விலை ₹20 லட்சம் மட்டுமே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More