Home> Technology
Advertisement

Flipkart Sale: iPhone 13 இல் 27 ஆயிரம் வரை தள்ளுபடி பெறுங்கள்

மொபைல் போனான்ஸா விற்பனை பிப்ரவரி 9 முதல் பிளிப்கார்ட்டில் நடக்கிறது, இதில் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்களை மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். 

Flipkart Sale: iPhone 13 இல் 27 ஆயிரம் வரை தள்ளுபடி பெறுங்கள்

புது டெல்லி: மொபைல் போனான்ஸா விற்பனை பிப்ரவரி 9 முதல் பிளிப்கார்ட்டில் நடக்கிறது, இதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் முதல் ரியல்மி, ஓப்போ மற்றும் விவோ ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இன்று ஆப்பிளின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஐபோன் 13 இல் சிறந்த சலுகைகளைப் பற்றி காண உள்ளோம், இதன் உதவியுடன் இந்த போனில் ரூ.27,745 வரை தள்ளுபடி பெறலாம்.

ஐபோன் 13 இல் பம்பர் தள்ளுபடி
ஐபோன் 13 இன் 256ஜிபி மாறுபாடின் ஒரிஜினல் விலை ரூ.89,900 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் விற்பனையில் இந்த போனுக்கு 5% தள்ளுபடியை பெற்று ரூ.84,900க்கு விற்கப்படுகிறது. பிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கும் போது 5% அதாவது ரூ.4,245 கேஷ்பேக் கிடைக்கும், இதன் மூலம் போனின் விலை ரூ.80,655 ஆக குறையும்.

மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள் 

எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை அனுபவிக்கவும்
இந்த ஐபோன் 13 டீலில், உங்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளன. அதன்படி உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் ரூ.18,500 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான ஐபோன் 13 இன் விலை ரூ.80,655ல் இருந்து ரூ.62,155 ஆகக் குறைக்கப்படும். அதாவது வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைச் சேர்ப்பதன் மூலம், இந்த ஒப்பந்தத்தில் ரூ.27,745 தள்ளுபடியைப் பெறலாம்.

ஐபோன் 13 இன் அம்சங்கள்
இந்த ஒப்பந்தத்தில், ஐபோன் 13 இன் 256 ஜிபி மாறுபாட்டைப் பற்றி காண உள்ளோம், ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே மற்றும் விரைவான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதில் நீங்கள் இரட்டை பின்புற கேமரா அமைப்பைப் பெறுவீர்கள், இதில் இரண்டு சென்சார்களும் 12எம்பி மற்றும் அதன் முன் கேமராவும் 12எம்பி ஆகும். இது ஐபி68 மதிப்பீட்டை பெற்றுள்ளது.

பிளிப்கார்ட்டின் மொபைல் போனான்ஸா விற்பனையில் இருந்து இதுபோன்ற இன்னும் பல சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விற்பனையின் கடைசி நாள் பிப்ரவரி 14 ஆகும்.

மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More